நா முத்துக்குமாரின் மறக்க முடியாத 6 பாடல்கள்.. அப்பா, மகள் பாசத்தை உணர வைத்த ஆனந்த யாழை

Lyricst Na Muthukumar: புனைப்பெயர் இல்லாத புகழ்பெற்ற கவிஞர், இவரின் வரிகளால் மக்கள் மனதில் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் தேசத்தையும் கடந்து தேசிய விருது பெற்றிருக்கிறது. சிறந்த படைப்பாளியாக அனைவரும் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் கவிஞர் நா முத்துக்குமார்.  அப்படிப்பட்ட இவருடைய பாடல் வரிகளின் தொகுப்புகளை பற்றி பார்க்கலாம்.

பொதுவாக இவர் எல்லோருக்கும் சம்பந்தமான பாடல்களை எழுதி இருக்கிறார். அதில் தங்க மீன்கள் படத்தில் மறக்க முடியாதது அப்பாக்கும் பொண்ணுக்கும் இடையில் உள்ள பாசத்தை சொல்லும் விதமாக எழுதிய ” ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…” இந்தப் பாடல் தான் அனைவருடைய அப்பாக்களின் உயிர் வரிகளாக இருந்து வருகிறது.

அடுத்ததாக அம்மாவை தொலைத்த மகன்களுக்கு எழுதிய “ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை” இந்த வரிகளைக் கேட்டால் அனைவருக்கும் கண்களில் இருந்தும் அருவியாய் கொட்டும். இதற்கடுத்து அப்பாவை இழந்த மகன்கள் தவிக்கும் தவிப்பை சொல்லும் விதமாக “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… தந்தை அன்பின் முன்னே… தாலாட்டு பாடும் தாயின் அன்பும்… தந்தை அன்பின் பின்னே…”

அத்துடன் ஒரு காதலன் தன் காதலியை நினைத்து வாடுகிற பொழுது “எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்” இவருடைய இந்த மாதிரியான காதல் வரிகள் தான் பல பேருக்கு உண்மையான காதலை புரிய வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இதனை அடுத்து காதலி இந்த உலகத்தை விட்டுப் பிரியும் சோகத்தை தாங்க முடியாமல் காதலன் வாடும் அந்த நேரத்தில் ” நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன்” இதில் வருகிற ஒவ்வொரு வரிகளும் அனைவரது மனதிலும் இணை புரியாத ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கும்.

அடுத்ததாக ஒரு காதலன் தன் காதலியே நினைத்து உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் விதமாக வெளிவந்த பாடல் தான் ” உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது உன் துயரம் சாய என் தோல் உள்ளது” இன்னும் இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். உலகத்தில் உள்ள அத்தனை அழகையும் பாடல் வரிகளால் நம் கண் முன்னே நிறுத்தியவர். இன்று இவருடைய 48 வது பிறந்த நாள். இவர் மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் இவருடைய வரிகளால் நம்முடன் வாழ்ந்து வருகிறார்.