60 வயதில் பாக்ஸிங் வீரராக நடிக்க ஜிம்மில் கஷ்டப்படும் பிரபல நடிகர்.. இதுக்கெல்லாம் செம தில்லு வேணும்!

இந்திய சினிமாவில் அறுபது வயதை எட்டி விட்டாலே நோகாமல் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய வயதை பொருட்படுத்தாமல் கதாபாத்திரத்திற்காக உடலை மாற்றி அமைப்பதை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

ஹாலிவுட் நடிகர்கள் 60 வயதிலும் யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பல ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அனைவரையும் அசர வைக்கின்றன. ஆனால் இந்தியாவில் அப்படி வயதைப் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுக்கும் நடிகர்கள் கம்மிதான்.

ஆனால் தற்போது அது மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மோகன்லால் அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் பாக்ஸிங் வீரராக நடிக்க உள்ளாராம்.

இதற்காக கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து வருகிறார். கடைசியாக மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தில் கூட உடல் எடை கொஞ்சம் குறைந்திருப்பதை பார்க்க முடிந்தது.

மலையாள சினிமாவில் மோகன்லாலை வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குனராகவும் ப்ரியதர்ஷன் வலம் வருகிறார். இவர்கள் கூட்டணியில் மரக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் ஒரு படம் உருவாகி உள்ளதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க தற்போது மோகன்லால் ஜிம்மே கதியென்று கிடக்கிறாராம்.

mohanlal-cinemapettai-01
mohanlal-cinemapettai-01