Vijay Antony : இந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 7 படங்கள் வெளியாகிறது. முதலாவதாக தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் திரில்லர் கலந்த படமாக வெளியாகி இருந்தது மார்கன் படம். இந்த படத்திற்கு தியேட்டரில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் ஜூலை 25 ஓடிடியில் வெளியாகிறது.
பிக் பாஸ் பிரபலம் முகேஷ் ராவ், பவ்யா திரிகா, ராதாரவி போன்றோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியானது ஜின் தி பெட். ஃபேண்டஸி படமாக வெளியான இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இப்போது ஓடிடியில் இந்த படம் ஸ்ட்ரிமிங் செய்யப்படுகிறது.
அமேசான் பிரைமில் வெளியாகும் 7 படங்கள்
மேலும் ஆங்கிலத்தில் நோவோகைன் என்ற படம் வெளியாகிறது. காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜாக் காயிட், ஆம்பர் மிட் தண்டர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் மார்ச் மாதம் தியேட்டரில் வெளியான நிலையில் இப்போது ஓடிடியில் வருகிறது.
கொரியன் மொழியில் உருவான The Plot மற்றும் Handsome Guys ஆகியவை அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அமேசான் சீரிஸில் ஹண்டர் சீசன் 2 சீரிஸ் வெளியாகிறது. மேலும் Rangeen என்ற சீரிஸீம் வரவுள்ளது.
ஆகையால் ரசிகர்கள் கொண்டாடும் படி மிகவும் எதிர்பார்க்க படங்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகிறது. சனி மற்றும் ஞாயிற்று விடுமுறை நாளை வீட்டிலேயே இந்த படங்களை பார்த்து கண்டு களிக்கலாம்.