Ajith : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 வெளியாகிறது. இதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் குட் பேட் அட்லி 500 கோடி வசூல் செய்யும் என்பதற்கான முக்கியமான ஐந்து காரணங்களை பார்க்கலாம். முதலாவதாக சொல்ல வேண்டும் என்றால் இது அஜித்தின் படம். அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அடுத்ததாக இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். இவருடைய முந்தைய படமான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு அஜித்தின் ஃபேன் பாயாக இருப்பதால் தரமான சம்பவம் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.
மூன்றாவதாக இதில் நடித்திருக்கும் நட்சத்திர பட்டாளம் தான். திரிஷா, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, பிரசன்னா, பிரபு, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், ஜாக்கி ஷெரீஃப், ஜான் கோக்கன், சுனில் வர்மா, டார்க்கி நாகராஜ் என பலர் நடித்து இருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி 500 கோடி வசூல் செய்ய 7 முக்கிய காரணங்கள்
நான்காவதாக இந்த படத்தில் அஜித்தின் முந்தைய படங்களில் வெற்றி பெற்ற கதாபாத்திரங்களை ரெஃபரன்ஸ் செய்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தீனா, பில்லா, அமர்க்களம், மங்காத்தா போன்ற பல படங்களின் ரெஃபரன்ஸ் உள்ளது.
ஐந்தாவதாக குட் பேட் அக்லி படத்தில் ஒரு பத்து நிமிட காட்சி மிகவும் வேகமாக இருக்கிறதாம். அதுவும் சிறப்பாக அந்த காட்சியை எடுத்துள்ளார்களாம். அதோடு அஜித் பல கெட்டப்புகளில் வருகிறார்.
ஆறாவதாக ஜிவி பிரகாஷின் இசை தான். இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவும் ஜிவி பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடிய ஓஜி பாடலுக்கு நல்ல ரீச் இருந்தது.
குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் இப்படத்தை ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடுகிறது. இதனால் மிக குறுகிய காலத்திலேயே 500 கோடி வசூலை அசால்ட் ஆக அடித்து விடும்.