இந்த மாதம் ரிலீசுக்கு காத்திருக்கும் 8 படங்கள்.. எதிர்பார்ப்பில் உதயநிதியின் மாமன்னன்

ஒவ்வொரு மாதமும் பல படங்கள் வெளியானாலும் அதில் சில படங்கள் தான் ரசிகர்களை கவர்ந்து வெற்றியடைகிறது. இதில் குறிப்பாக வெள்ளிக்கிழமையை டார்கெட் செய்து தான் தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். காரணம் அடுத்த இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள்.

ஆகையால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும், இதனால் போட்ட பட்ஜெட்டை எப்படியும் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் உள்ளனர். அந்த வகையில் ஜூன் மாதம் கிட்டத்தட்ட எட்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதில் என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

அந்த வகையில் ஜூன் ஒன்பதாம் தேதி மூன்று படங்கள் வெளியாகிறது. அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை பதப்பதைக்க வைத்தது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

போர் தொழில் படத்திற்கு போட்டியாக சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் படம் வெளியாகிறது. இப்படம் சித்தார்த்துக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார். விமானம் படமும் அன்று வெளியாகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது.

மேலும் ஜூன் 16ஆம் தேதி மூன்று படங்கள் வெளியாக இருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் படம் அன்று வெளியாகிறது. ரிலீசுக்கு முன்பே இப்படம் பல கோடி வியாபாரம் ஆகியுள்ளது. இதனால் எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதே நாளில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை மற்றும் சார்லி நடிப்பில் உருவான எறும்பு படங்கள் வெளியாகிறது.

ஜூன் 23ஆம் தேதி தண்டட்டி என்ற படம் வெளியாகிறது. இந்த மாதம் கடைசி வாரமான 29ஆம் தேதி மாமன்னன் படம் போட்டியின்றி தனியாக வெளியாகிறது. இப்படத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மற்ற படங்களை காட்டிலும் மாமன்னன் படத்திற்கு சற்று கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.