இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள 8 படங்கள்.. தியேட்டரில் சோடைபோன பீட்சா 3

This Week OTT Release Movies: இப்போது ரசிகர்களிடம் தியேட்டரை விட ஓடிடியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. ஆகையால் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு டிவியில் படங்களை பார்ப்பது அவர்களுக்கு சுலபமாகிவிட்டது. இதனால் வாரம் தவறாமல் ஓடிடியில் எக்கச்சக்க படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.

அந்த வகையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி பல மொழிகளில் நிறைய படங்கள் வெளியாக உள்ள நிலையில் அதில் 8 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் ஜூலை மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஆனால் தியேட்டரில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைக்காத நிலையில் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சின்னத்திரையில் கலக்கி வந்த கார்த்திக் ராஜ் தயாரித்து நடித்திருக்கும் படம் தான் பிளாக் அண்ட் ஒயிட். இப்படம் ஜீ5 ஓடிடியில் ஆகஸ்ட் 25 வெளியாகிறது.

மலையாளத்தில் ஜெயலால திவாகரன் இயக்கத்தில் புலனாய்வு நகைச்சுவைப் படமான குருக்கன் என்ற படம் மனோரமா மேக்ஸில் வெளியாக இருக்கிறது. பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரோ என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் பாலிவுட்டில் தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆக்ரி சாச் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படுகிறது.

பெங்காலியில் ஷோஹரர் உஷ்னோடோமோ தின் என்ற ரொமான்டிக் படம் ஆகஸ்ட் 25 ஜீ5யில் வெளியாகிறது. மார்வெல் காமிக் தொடரில் டொமினிக் நடிப்பில் அயர்ன் ஹார்ட் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஜியோ சினிமாவில் இந்த வாரம் புதிய வெளியீடாக பஜாவோ என்ற படம் வர இருக்கிறது.

இவ்வாறு இந்த வாரம் தியேட்டர் ரிலீஸை காட்டிலும் ஓடிடியில் நிறைய படங்கள் படையெடுத்துள்ளது. ரசிகர்கள் பெரும்பாலும் தியேட்டருக்கு செல்வதை தவிர்த்து விட்டு இந்த படங்களை தான் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை விரைவில் பார்க்கலாம்.