கூலியை பற்றி சமீபத்திய யூடியூப் 8 தலைப்புகள்.. லோகேஷை பாராட்டிய ரஜினி

Rajini : லோகேஷ், ரஜினி காம்போவில் உருவாகி இருக்கும் கூலி படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படம் இன்னும் 50 நாட்களில் திரையரங்குகளில் வெளியாக்குவதால் யூடியூப்பில் கூலி படத்தை பற்றிய பேச்சு தான்.

அவ்வாறு சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட எட்டு தலைப்புகளை பற்றி ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். முதலாவதாக கூலி படத்தின் முதல் பாதியை ரஜினி பார்த்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

இதை குறிப்பிடும் வகையில் முதல் பாதியை பார்த்து அசந்து போன ரஜினி. அடுத்ததாக சூப்பர் கண்ணா சூப்பர் என லோகேஷை பாராட்டினார் ரஜினி என்று தொடர்ந்து தலைப்புகள் வருவதாக பதிவிட்டிருக்கிறார். மேலும் தன் படத்தை தானே பாராட்டிய சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை.

கூலியை பற்றி யூடியூப்பில் வளம் வரும் 8 தலைப்புகள்

இதைத்தொடர்ந்து சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ஆயிரம் கோடி வசூலிக்கும் என செய்திகள் வெளியாகிறது. அவ்வாறு தமிழில் முதல் 1000 கோடி படம் கூலி, ரிலீசுக்கு முன்பே ஆயிரம் கோடி பிசினஸ் அசந்து போன திரையுலகம் என்றெல்லாம் டைட்டில் வருகிறது.

இது ஒருபுறம் இருக்க ஆந்திரா, கேரளா மற்றும் ஹிந்தியில் வரலாறு காணாத பிசினஸ் சாதனை செய்யும் கூலி என்று யூடியூப் டைட்டில் வருகிறது. உலக அளவில் விஜய் படங்களின் வியாபாரத்தை முறியடித்த கூலி.

ரஜினி சாருடன் நடித்தது நான் செய்த புண்ணியம் என்று அமீர்கான் பேட்டி என்ற டைட்டில்கள் உலாவி வருகிறது. பொதுவாகவே படத்திலிருந்து இதுபோன்ற டைட்டில்கள் இணையத்தில் உலாவுவது வழக்கமாகத்தான் இருந்து வருகிறது.