ஒரே நடிகைக்காக அடித்துக் கொண்ட அஜித், அப்பாஸ்.. முத்தின மூஞ்சி ஹீரோயினுக்காக போட்ட அடிதடி

90’s actress Tabu gossip with 2 Chocolate heros: பொதுவாக சினிமா என்றால் காதல் கிசுகிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. படம் நடித்து ஹிட் ஆகிவிட்டால் அதே ஜோடியை அடுத்து வரும் படங்களுக்கும் புக் செய்வது எழுதப்படாத விதியாக சினிமாவில் உள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த ஜோடிகளுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது, காதல் மலர்ந்து விட்டது என்று கொளுத்தி போடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர் சினிமா ஆர்வலர்கள். 

மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி தமிழ்,தெலுங்கு, மலையாளம் போஜ்புரி, ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர் இந்த நடிகை. ஹைதராபாத்தில் இருந்து வந்தவர் தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மறக்க முடியாத நடிகையாக தடம் பதித்து போனார் இந்த தங்க புஷ்பம். 

தபூசம் பாத்திமா ஹாஸ்மி என்று இயற்பெயர் கொண்ட நடிகை தபு, 90ஸ் காலகட்டத்தில் தமிழில் இருவர், காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இளைஞர்களிடையே பரவலாக பிரபலமானார். 

கல்லூரி சாலையாக வந்து காளையர்களின் மனதை கொள்ளை கொண்ட தபு, காதல் தேசம் திரைப்படத்தில் அப்பாஸ் உடன் இணைந்து நடித்த போது கிசு கிசுக்கப்பட்டார். “ஹலோ டாக்டர் ஹாட் வீக் ஆச்சு” என்று அப்பாஸ் செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போனது. 

அப்பாஸை தூக்கி சாப்பிடும் அளவுக்கு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அப்பாஸ்சை துரத்தி அடித்து தபுவை பின் தொடர்ந்து காதலால் உருகி என்ன சொல்லப் போகிறாய்? என்று காதல் வலை வீசினார் அஜித். இப்படத்தில் நடித்த போது அஜித் மற்றும் தபுவிற்கு கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட்டாகி படமும் மாபெரும் ஹிட் அடித்தது.

பத்மஸ்ரீ விருது உட்பட  இரண்டு தேசிய விருதுகள் ஏழு பிலிம் பேர் விருதுகள் என தனது அபார நடிப்பின் மூலம் பல விருதுகளை தனதாக்கி கொண்ட தபு தெலுங்கு நடிகர் ஒருவரை ஒருதலையாக காதலித்து இன்று வரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.  அஜித்தின் அடுத்த படமான ஆதிக்  ரவிச்சந்திரனின் AK63 யில் அஜித்தின் ஜோடியாக தபு பேசப்பட்டு வருகிறார். 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மணம் விச வருகிறத இந்த சந்தன தென்றல்.