20 வயது பெண்ணுடன் குடித்தனம் நடத்திய 55 வயது சாமி நடிகர்.. புருஷன் லீலைகளை சந்தி சிரிக்க வைத்த மனைவி

Samy Actor: டாப் ஹீரோக்களின் அந்தரங்க லீலைகள் பற்றிய எத்தனையோ செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தன் கணவனை பற்றி மனைவியே சொன்ன ஒரு விஷயம் தான் இப்போது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இதன் மூலம் அவர் தன் புருஷனை சந்தி சிரிக்க வைத்திருக்கிறார்.

அதாவது சாமி நடிகர் பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள செய்தி நம்ப முடியாத ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அதாவது தன் நண்பரின் மகளுடன் இவர் தனியாக குடித்தனம் நடத்திய செய்தி தான் கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் அந்த பெண்ணுக்கு 20 வயது தான் இருக்குமாம். 55 வயதான நடிகர் இப்படி தன் மகளுடன் தவறான உறவில் இருப்பதை பார்த்து நொந்து போயிருக்கிறார் அந்த நண்பர். அதைத் தொடர்ந்து சாமி நடிகரின் மனைவியிடம் சென்று அழுது புலம்பி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து சாமி நடிகரிடமும் மனைவி விசாரணை செய்திருக்கிறார். அதற்கு அவர் ரொம்பவும் கூலாக நானாக தேடி போகவில்லை, அந்த பெண்ணாக என்னை தேடி வரும் போது நான் என்ன செய்வது என்று சொல்லி இருக்கிறார். இதனால் கடுப்பான மனைவி நடிகரின் நண்பர்களுக்கு எல்லாம் ஒரு மெசேஜ் செய்திருக்கிறார்.

என்னவென்றால் என் கணவரை யாரும் வீட்டிற்குள் சேர்க்க வேண்டாம். அதிலும் பெண் பிள்ளை வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இந்த தகவலை வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் ஒரு வீடியோவில் மிகவும் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

இதுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே நடிகரை பற்றி திரை உலகில் உள்ள பலருக்கும் தெரியும் என்றாலும் இது புது தகவலாக இருக்கிறது. ஆனாலும் சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று பலரும் இந்த கதையை கேட்டு தலையில் அடித்த படி நகர்கின்றனர்.