விஷாலை நம்பி வாங்கிய பெரிய ஆப்பு.. பாட்ஷா பாய் போல் சுந்தர் சி திருப்பி கொடுத்த தரமான அடி

தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களை காமெடி படங்களாக மாற்றி மக்களின் கவனத்தை பெற்றவர் தான் இயக்குனர் சுந்தர். சி. இந்நிலையில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் தனது கனவு படமான சங்கமித்ரா படத்தை, மீண்டும் இப்பொழுது கையில் எடுத்துள்ளார். இதில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருந்த நிலையில் விஷால் காட்டிய கெடுபிடியால் சுந்தர் சி அதிரடியான முடிவினை எடுத்து உள்ளார். 

இதனைத் தொடர்ந்து படத்தில் ஆர்யா, விஷால், சுருதிஹாசன் மற்றும் சில நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் நடிக்க இருக்கும் சங்கமித்ரா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதிலும் சங்கமித்ரா படத்தில் இரண்டு பாகங்களில் நடிக்க இருப்பதால் பல கோடிகளில் சம்பளத்தை கேட்டுள்ளார் விஷால்.  இதனால் தலை சுற்றி அதிர்ச்சியில் உறைந்து உள்ளார் இயக்குனர் சுந்தர். சி. அவ்வளவு எல்லாம் சம்பளம் கொடுக்க முடியாது என்று பாட்ஷா பாய் போல அதிரடியான முடிவை எடுத்து நடிகரையே மாற்றியுள்ளார் இயக்குனர்.

தற்பொழுது விஷால் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மலையாள நடிகர் பிரித்விராஜை ஒப்பந்தம் செய்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க  இருக்கிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பானது அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஷால் சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதில்லை என்ற நிலையை மாற்றி, தற்பொழுது ஆக்டிவாக தனது பணிகளில் களமிறங்கியுள்ளார். மேலும் இப்பொழுது நிறைய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதிலும் பழைய மாதிரி இல்லாமல் ரெகுலராக படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது பெயரை காப்பாற்றிக் கொள்கிறாராம்.

இந்நிலையில் இவரின் படங்கள் ஓடாவிட்டாலும் சம்பள விஷயத்தில் மட்டும் விடாப்பிடியாக இருந்து வருகிறார். அதிலும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் இவர் கேட்டுள்ள சம்பளம் அதிகமாக இருக்கும் நிலையில், அதனைக் குறைக்காமல் கெடுபிடி காட்டி வருகிறார். இதனால் இயக்குனர் எடுத்த அதிரடியான முடிவினால் விஷால் நடிக்க இருந்த பிரம்மாண்ட படத்தின் வாய்ப்பானது கைநழுவி சென்றுள்ளது.