வில்லன் கேரக்டர் என்றாலே தற்போதும் ரசிகர்களின் மனதில் நிற்பவர் நடிகர் ரகுவரன் தான். அவருடைய குரல், உடல்மொழி என அனைத்தும் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரகுவரன் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த அசத்தார்.
அதுவும் ரகுவரன் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் பாட்ஷா. இதில் மார்க் ஆண்டனி ஆக ரஜினியையே மிரள விட்டிருந்தார் ரகுவரன். இப்படத்தைத் தொடர்ந்து ரகுவரனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்தது. இந்நிலையில் 60,70களிலேயே ரகுவரனுக்கு டஃப் கொடுத்துள்ளார் விக்கல் மன்னன்.
சிவாஜி, எம்ஜிஆர் காலத்திலேயே சினிமாவில் நுழைந்த இந்த நடிகர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அனைத்து ஹீரோக்களுக்கும் ஏற்ற ஒரே வில்லன் என்றால் அது அவர் தான். பெரும்பான்மையான ரஜினி படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதுவும் ரஜினியின் பணக்காரன் படத்தில் விக்கி விக்கியே பெயர் வாங்கி விட்டார். அதிலிருந்து ரசிகர்களிடம் விக்கல் மன்னன் என்று அழைக்கப்பட்டார். அதாவது ரஜினியின் பல படங்களில் வில்லனாக மிரட்டியவர் நடிகர் செந்தாமரை.
ஆரம்பத்தில் நாடகத் துறையில் இருந்த இவர் சினிமாவில் நுழைந்து படிப்படியாக தனக்கான இடத்தை பிடித்தார். தன்னுடைய அசாத்தாயமான நடிப்பால் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை செந்தாமரை பெற்றார். அதிலும் மூன்று முகம் படத்தில் ஏகாம்பரமாக ரஜினியே மிரள விட்டிருப்பார் செந்தாமரை.
மேலும் அடுத்த வாரிசு, தம்பிக்கு எந்த ஊரு, அன்புள்ள ரஜினிகாந்த், குரு சிஷ்யன் போன்ற ரஜினியின் பல படங்களில் செந்தாமரை நடித்துள்ளார். இவர் கடைசியாக துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே மாரடைப்பால் செந்தாமரை உயிரிழந்தார்.