ரஜினியுடன் போட்டி போடும் பிரபலம்.. ரஜினியை வீழ்த்தும் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

Rajinikanth : சினிமாவில் இன்றளவும் வயதை பெரிதளவில் எடுத்துக் கொள்ளாமல் தனது ஸ்டைலாலும், நடிப்பாலும் அனைத்து ரசிகர்களையும் கட்டி போட்டு வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பிரதமரே ரஜினிகாந்துக்கு ஒரு காலத்தில் காத்துக்கொண்டிருந்தாராம். அந்த நேரம் பார்த்து ரஜினிகாந்த் பட சூட்டிங் பிஸியாக இருந்ததால் வர முடியாமல் போனது. இருந்தாலும் தலைவரை பார்ப்பதற்காக காத்திருக்கிறார். நம் நாட்டின் பிரதமர் சினிமாவில் நடிக்கும் ஒரு நடிகருக்காக காத்திருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

தமிழ்நாட்டில் ரஜினியின் திரைப்படம் வருகிறது என்று சொன்னாலே போதும் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு ஒரு அளவே இருக்காது. பால் அபிஷேகம் என்ற பெயரில் ஊர் முழுக்க ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். இந்த அளவுக்கு சினிமாவில் ஒருவரும் இல்லை என்பது போல் ஒவ்வொரு படமும் ரஜினியை திரும்பி பார்க்க வைக்கிறது.

தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் அப்டேட் தான் அவ்வபோது வந்து கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படம் சில நாட்களாகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

ஆகஸ்ட் 14 திரையில் கூலி திரைப்படம் வெளியாகப் போகிறது என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் இத்திரைப்படம் பரவி ரசிகர்களின் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை முன் வைத்துள்ளது. தலைவர் நடித்த படம் என்றால் சும்மாவா இருக்கும்.

இந்நிலையில் அமீர்கான் நடித்திருக்கும் War2 என்ற திரைப்படமும் அன்று தான் வெளியாக உள்ளது. தற்போது வடநாட்டு மக்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. என்னதான் அமீர்கான் பெரிய ஹீரோவாக இருந்தாலும், ரஜினியும் பெரிய ஹீரோ தான் என்று ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது.

ஆகஸ்ட் 14 ரஜினியின் கூலி திரைப்படமும் அமீர்கானின் War2 திரைப்படமும் மோத உள்ளது. இந்த திரைப்படத்தில் எது ஜெயிக்கும் என்பது மக்களுக்கு ஒரு குழப்பத்தை தந்துள்ளது என்று சொல்லலாம். தலைவரின் கூலி திரைப்படம் வடக்கிலும் வெடிக்கும்.