தமிழ் திரையுலகில் ஹீரோ அந்தஸ்துக்கு இணையான ஒரு ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் புகார்கள் இருந்தாலும் இவர் நடிப்பில் வெளியாகும் படங்களை திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இவர் புகழின் உச்சியில் இருக்கிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள கனெக்ட் திரைப்படம் பாராட்டுகளை பெற்று வந்தாலும் பெரிய அளவில் அதில் சுவாரஸ்யம் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்துடன் எங்களால் கனெக்ட் ஆக முடியவில்லை என்ற விமர்சனங்களும் இப்போது வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சோசியல் மீடியா பிரபலமான பிரசாந்த் ரங்கசாமி இந்த படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து ரிவ்யூ செய்து இருக்கிறார்.
இப்போது யூடியூபில் புதிதாக வெளிவரும் படங்களை ரிவ்யூ செய்து வருவது பிரபலமாக இருக்கிறது. அதில் முக்கிய நபராக இருக்கும் பிரசாந்துக்கு அதிக பாலோவர்ஸ் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இவருடைய விமர்சனத்தை கேட்டு விட்டு படத்தை பார்க்க செல்லும் ரசிகர்களும் இருக்கின்றனர். அந்த அளவுக்கு இவருடைய கருத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவருடைய கனெக்ட் விமர்சனம் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. விமர்சனம் என்றால் ஒரு படத்தின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து நேர்மையாக தான் கொடுக்க வேண்டும். ஆனால் அவருடைய விமர்சனத்தை பார்க்கும் போது அவர் ஒரு சார்பாக பேசியது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள் தற்போது அவரை சோசியல் மீடியாவில் வச்சி செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் அவர் பணத்தை வாங்கிக் கொண்டு நயன்தாராவுக்கு கூஜா தூக்குவதாகவும் அவருடைய விமர்சனம் முழுக்க முழுக்க தவறானது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சர்ச்சையை பார்த்த பிரசாந்த் என்னுடைய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். கனெக்ட் திரைப்படம் அருமையான கதையம்சம் கொண்ட படம். இது ஒரு அற்புதமான படைப்பு மற்றும் கொண்டாடப்பட வேண்டிய படம் என்று தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்களை இன்னும் வெறி ஏத்தி உள்ளது. அந்த வகையில் இவர் ஒரு படத்தை ரிவ்யூ செய்ய தகுதி இல்லாதவர் என்றும் என்னதான் குறை இல்லாத படமாக இருந்தாலும் ஒரு நெகட்டிவ் விஷயங்கள் கூடவா இருக்காது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் பிரீமியர் ஷோவுக்கு சென்ற பிரசாந்த், நயன்தாரா, விக்னேஷ் சிவன், இயக்குனர் அஸ்வின் சரவணன் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டதையும் வெளியிட்டு இருந்தார். இதுவே தற்போதைய சர்ச்சைக்கு முக்கிய சாட்சியாக இருக்கிறது.