ரஜினி வீட்டில் ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த தர்ம அடி.. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் விமர்சகர்

Blue Sattai Maran: படங்களை விமர்சனங்கள் செய்து சிறந்த விமர்சகர் என்று நினைத்து அனைத்து படங்களைப் பற்றியும் தாறுமாறாக வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசி வருவதே இவருடைய வழக்கமாகி விட்டது. இதனால் அனைத்து ரசிகர்களும் இவரை அடிக்காத குறையாக கழிவு கழுவி ஊத்தி வருகிறார்கள்.

ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படங்களுக்கு தாறுமாறாக விமர்சனத்தை கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட இவரை திடீரென்று ரஜினி இமயமலை போவதற்கு முன் பார்க்க வேண்டும் என்று அழைப்பு கொடுத்ததாக கூறுகிறார். அதாவது ரஜினியின் நம்பிக்கைக்குரிய ஒரு பத்திரிக்கையாளரிடமிருந்து இவருக்கு அழைப்பு வந்ததாம்.

ஆரம்பத்தில் தயங்கிய ப்ளூ சட்டையை பத்திரிக்கையாளர் பயப்பட வேண்டாம் அவர் உங்கள் மீது கோபமாக தான் இருக்கிறார். அதே நேரத்தில் உங்களை பார்த்து பேச வேண்டும் என்று நினைக்கிறார். அவர் உண்மையிலேயே அன்பானவர் தான் நீங்கள் வந்து பேசினால் அனைத்தையும் சரி செய்து விடலாம் என்று கூப்பிட்டு இருக்கிறார்.

அடுத்தபடியாக இவர் பேசப்போன நிலையில் இதை வீடியோ எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த மாதிரி எந்த வீடியோக்களும் எடுக்க அனுமதி இல்லை என்று சொல்லி கையெழுத்து வாங்கிக் கொண்டாராம். அதன் பின் ரஜினியை சந்தித்து பேசி வந்தேன் என்று கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறியது ரஜினியை நான் சந்தித்ததில் மிகவும் கசப்பான அனுபவமாக எனக்கு கிடைத்திருக்கிறது. இதை என் வாழ்நாளில் நான் மறக்கவே முடியாது அந்த அளவிற்கு நான் அவமானத்தை பெற்று இருக்கிறேன் என்று புலம்புகிறாராம். இவர் பேசியதை வைத்து பார்க்கும் பொழுது ரஜினி வீட்டில் இவருக்கு தர்ம அடி விழுந்திருக்கும் போல அந்த அளவுக்கு தான் தெரிகிறது.

அப்படி இல்லை என்றால் ரஜினி இவரை கூப்பிட்டு பேசுவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை. அந்த அளவிற்கு இவர் ஒன்னும் பெரிய ஆளும் கிடையாது, ரஜினியும் இந்த அளவுக்கு இறங்கிப் போக மாட்டார். ப்ளூ சட்டை தான் தேவை இல்லாமல் பொய் பேசி வாய்க்கு வந்தபடி உலறுகிறார் என்பதுதான் உண்மையாக இருக்கும் என்று தெரிகிறது. ஆக மொத்தத்தில் இவருக்கு ஏதோ ஒரு கசப்பான விஷயம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.