Vijay Antony: 16 வயது குழந்தைக்கு அப்படி என்ன மன அழுத்தம் இருக்கப் போகிறது, எதற்காக இந்த முடிவு என்ற கேள்வி தான் இப்போது அனைவர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று காலையிலேயே விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டார் என வெளிவந்த செய்தி ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் முதல் மீராவின் பள்ளி தோழிகள், ஆசிரியர்கள் என அனைவரும் பதறியடித்து அவரின் வீட்டை தேடி ஓடி வந்தனர். மேலும் கண்ணுக்கு கண்ணாக வளர்த்த மகளின் இறப்பை தாங்க முடியாத அதிர்ச்சியில் இருந்த விஜய் ஆண்டனிக்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர்.
ஆனால் எத்தனை வார்த்தைகள் சொல்லி அவரை சமாதானப்படுத்தினாலும் இந்த இழப்பு யாராலும் ஈடு கட்ட முடியாதது தான். ஏனென்றால் மீராவுடன் நெருங்கி பழகியவர்களுக்கே இந்த விஷயத்தை ஏற்றுக் கொள்வது அவ்வளவு கடினமாக இருக்கிறது. அதை பலரும் வெளிப்படையாகவே கூறி கலங்கி வருகின்றனர்.
இந்த வகையில் மீராவின் தோழிகள் அவ ரொம்ப தைரியமான பொண்ணு, எல்லோரிடமும் ஜாலியாக பேசுவா. ஆனா எதற்கு இப்படி ஒரு முடிவை எடுத்தான்னு எங்களுக்கு புரியல என ஆதங்கத்துடன் புலம்பி வருகின்றனர். மேலும் விஜய் ஆண்டனி வீட்டில் பணிபுரிந்த பெண்மணி ஒருவரும் தன் சோகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதாவது மீரா வீட்டில் அமைதியாக தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார். பணிபுரிபவர்களை எந்த தொந்தரவும் செய்ய மாட்டார். தனக்கு வேண்டும் உணவை கூட அவரே எடுத்துக் கொள்வார். அவருக்கு தயிர் தான் ரொம்ப பிடிக்கும். அவருடைய பிறந்த நாளில் கூட எங்களுக்கு கேக் எல்லாம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார்.
அப்படிப்பட்ட தங்கமான பொண்ணு இன்னைக்கு இல்லையே என அவர் கண்ணீருடன் பேசி உள்ளார். இப்படி அனைவரிடமும் இயல்பாக பழகிய மீரா தன் அப்பாவிடமும் வெளிப்படையாக பேசுவாராம். அப்படி இருக்கும்போது அவர் இப்படி ஒரு முடிவை எடுத்து அனைவருக்கும் தீரா வேதனையை கொடுத்தது ஏன் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.