Actor Arun Vijay: ஒரு சில படங்கள் நடித்து கைகொடுக்காவிட்டால் பரவாயில்லை ஆனால் தொடர்ந்து நடிக்கும் எந்த படமும் கை கொடுக்காமல் இருக்கும் பிரபலங்களை லக் இல்லாதவர்கள் என ஒதுக்கி விடுவார்கள். இருப்பினும் தன் விடாமுயற்சியை வெளிகாட்டும் பிரபலங்கள் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வாறு தன் தந்தையின் சிபாரிசில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தொடர்ந்து தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு வரும் நடிகர் தான் அருண் விஜய். இவரின் ஒரு சில படங்கள் பெரிதும் பேசப்பட்டாலும், இன்று வரை சினிமாவில் போராடி தான் நடித்து வருகிறார்.
நடிகர் விக்ரம் தனக்கான அங்கீகாரத்தை போராடி ஜெயித்தார். அதேபோல் இவரும் வாய்ப்புக்காக தொடர்ந்து பாடி பில்டிங், டான்ஸ், பைட் போன்ற எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு மீண்டும் தன்னை நிரூபித்து வருகிறார். 2015ல் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில், அஜித்திற்கு போட்டியாய் களமிறங்கிய விக்டர் கதாபாத்திரத்தில் அருண் விஜய் பெரிதும் பேசப்பட்டார்.
அதற்குப்பின் குற்றம் 23 படத்தில் ஹீரோவாய் தோன்றிய அருண் விஜய் இப்படத்தின் மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸில் ஹிட் கொடுத்தார். அதற்குப் பின் நடித்த எந்த படமும் சரிவர பேசப்படவில்லை. இந்நிலையில் குற்றம் 23 படத்தின் இயக்குனரான அறிவழகன் மீண்டும் 2வது முறை அருண் விஜய்யை வைத்து பார்டர் என்னும் படத்தை எடுத்து ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கிறார்.
இப்படமே என்ன நிலைமை என தெரியாது நிலையில், மீண்டும் மூன்றாவது முறையாக கூட்டணி சேர பேசப்பட்டு வருகிறதாம். அருண் விஜய்யை நம்பி இயக்குனர் போடும் இத்தகைய முயற்சி மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல இருந்து வருகிறது.
மேலும் இயக்குனர் மட்டுமல்லாமல் குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளரும் இப்படத்தில் இணைய போகிறாராம். சமீபகாலமாய் அருண் விஜய் தன் கைவசம் அதிக படங்கள் வைத்திருந்தாலும், எந்த படம் வெற்றி பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.