Sun Pictures : சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து ரஜினியின் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தை கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
இதற்கு அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸின் கல்லாப்பெட்டிக்கு ஆபத்து வரும்படி ஒரு செய்தி வந்துள்ளது.
அதாவது பல கோடி முதலீட்டில் சன் பிக்சர்ஸ் கூலி படத்தை தயாரித்து வருகிறது. இதில் நடிக்கும் பிரபலங்களுக்கே ஒரு பெரிய தொகையை ஒதுக்கி இருக்கிறது. காரணம் எப்படியும் வசூல் மூலம் தனது கல்லாப்பெட்டியை நிரப்பி விடலாம் என்ற எண்ணம் தான்.
கூலி படத்திற்கு போட்டியாக இறங்கும் படம்
ஆனால் இப்போது கூலி படத்திற்கு போட்டியாக வார் 2 படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி இருந்தது. ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருக்கிறார்.
வேற லெவலில் உருவாகி இருக்கும் வார் 2 ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படமும் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாகும் அன்று ரிலீஸ் ஆக உள்ளது. ஆகையால் கடுமையான போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது.
கூலி படமும் பான் இந்தியா படமாக உருவாக்குவதால் எல்லா மொழிகளிலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் வார் 2 வெளியானால் கண்டிப்பாக வசூலில் பாதிப்பு ஏற்படும்.