Jailer Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நடித்தால் கண்டிப்பாக அவர்களுக்கு மவுசு அதிகம் தான். அந்த வகையில் ஜெயிலர் படத்தை எடுத்துக் கொண்டால் என்னில் அடங்காத முன்னணி பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். ஆனால் இதில் பெயரை வாங்கிச் சென்ற பிரபலங்கள் யார் என்பதை எண்ணி விடலாம்.
அந்த வகையில் மலையாள நடிகர் விநாயகன் நடிப்பில் மிரள விட்டிருந்தார். அடுத்ததாக சொல்ல வேண்டும் என்றால் ரஜினி மற்றும் யோகி பாபு காம்போ ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிலையில் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து கிடைக்காத அங்கீகாரம் ரஜினியுடன் நடித்ததால் பெற்றுள்ளார் ஹீரோ ஒருவர்.
அதாவது தரமணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் தான் வசந்த் ரவி. இந்த படம் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்த நிலையில் அடுத்ததாக ராக்கி என்ற படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் ஹீரோவாக நடித்து அஸ்வின்ஸ் படம் வெளியானது. இந்த படம் மிகவும் திரில்லராக இருந்தது.
ஆனாலும் இதுவரை தமிழ் சினிமா வசந்த் ரவியை கொண்டாடவில்லை. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டப்படும் வசந்த் ரவி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார்.
ஏசிபி அர்ஜுன் பாண்டியனாக அவருடைய கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ரஜினியை வசந்த் ரவியிடம் இந்த கதாபாத்திரத்தை உங்களைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று பாராட்டியதாக அவரே சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இதுவரை ரசிகர்களின் கவனம் பெறாத வசந்த் ரவி இப்போது ஜெயிலர் படத்தால் லைம் லைட்டுக்கு வந்துள்ளார். ஆகையால் இனி அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஜெயிலர் மூலம் வசந்த் ரவிக்கு விடிவு காலம் ஏற்பட்டு இருக்கிறது.