சூரியிடம் மொத்தமா சுருட்டிய ஹீரோ.. ஆண்டவன் மேல பாரத்தை போட்டு பல மடங்கு திருப்பி எடுத்த குமரேசன்

சூரி சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சூரி ஆலமரமாய் தற்போது வளர்ந்து நிற்கிறார்.

அதாவது மதுரையில் சொந்தமாக ஹோட்டல், சென்னையில் தனக்கு தேவையான அளவு சொத்து என பல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கதாநாயகனாக நடித்து சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அவருடைய நடிப்புக்கு சூப்பர் ஸ்டார் முதல் பல பிரபலங்கள் பாராட்டுகளை கூறிவருகிறார்கள்.

மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி உள்ளது. இந்நிலையில் சூரி நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டிருந்தார். அதாவது அந்த காலகட்டத்தில் ஓரளவு அப்போது தான் சூரி வளர்ந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஹீரோ விஷ்ணு விஷாலுடன் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

இதில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக விஷ்ணு விஷாலின் அப்பா சூரிக்கு இடம் வாங்கி தருவதாக கூறி கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு கோடி வரை ஏமாற்றி விட்டார். கடைசியில் உண்மை அறிந்த சூரி கோர்ட், கேஸ் என அலைந்தார். மேலும் நம்பிய விஷ்ணு விஷாலும் சூரி மேல் தான் தப்பு என ஊடகங்களில் பேட்டி கொடுத்த வந்தார்.

கடைசியாக ஆண்டவன் மேல் பாரத்தை போட்ட சூரி இப்போது பல மடங்கு சம்பாதித்து வருகிறார். பார்க்கும் இடமெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறாராம். ஒரு கதவை மூடினால் கண்டிப்பாக இன்னொரு கதவு திறக்கும் என்பது போல ஒருவரால் ஏமாற்றப்பட்டாலும் தன்னுடைய கடின உழைப்பால் சூரி முன்னேறி உள்ளார்.

மேலும் விடுதலை படத்தை பார்த்த பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சூரியை வலை வீசி தேடுகிறார்களாம். ஏனென்றால் அந்த அளவுக்கு அடுத்தடுத்த படங்களில் ஹீரோ வாய்ப்பு சூரியை நாடி வருகிறதாம். சொல்லப்போனால் விஷ்ணு விஷாலையே ஓரம் கொட்டும் அளவுக்கு சூரி வளர்ந்து வருவார்.