இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லா மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி பெரும்பாலும் பான் இந்தியா மொழி படங்களாக நிறைய படங்கள் வெளியாகிறது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் படங்கள் வெளியாகி வருகிறது.
ஆகையால் அந்த ஹீரோக்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி இல்லை. தமிழ் மொழியில் உள்ள ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருவார்கள்.
இந்நிலையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றளவும் இவரது படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் எம்ஜிஆர் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய அளவில் பேசப்படும்.
எம்ஜிஆர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஒரே ஒரு மலையாள படத்திலும் நடித்திருந்தார். இது பலரும் அறியாத ஒரு விஷயமாகும். அதாவது 1953 ஆம் ஆண்டு வெளியான ஜெனோவா என்ற மலையாள படத்தில் தான் எம்ஜிஆர் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவருடன் இணைந்து பிஎஸ் சரோஜா மற்றும் பி எஸ் வீரப்பா ஆகியோரும் நடித்திருந்தனர். ஜெனோவா படம் மலையாள மொழியில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஆனால் மலையாளத்தில் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் தமிழில் வெளியானது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் மற்றொரு சிறப்பு அம்சமும் உள்ளது. தமிழ் சினிமாவின் இசை கடவுளாக பார்க்கப்படும் எம் எஸ் விஸ்வநாதனின் அறிமுகப்படம் இதுதான். மேலும், இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து முன்னனி இசையமைப்பாளராக எம் எஸ் வி வலம் வந்தார்.