Actress Samantha: தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சமந்தா. ஒரு காலகட்டத்தில் நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு படுபிஸியாக இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடி கிட்டதட்ட மூன்று கோடி வரை சம்பளம் பெற்று இருந்தார்.
அந்த அளவுக்கு அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ஆனால் திடீரென உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரால் படத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அதோடு மட்டுமல்லாமல் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பழையபடி சமந்தா எப்போது மீண்டு வருவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஒருபுறம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து, உடலில் உள்ள பிரச்சனை, சினிமாவின் மார்க்கெட் சறுக்கல் என அடுத்தடுத்த பெரிய அடியை சந்தித்தார் சமந்தா.
ஆனாலும் மனம் தளராத அவர் மீண்டும் பழைய பொலிவுடன் வந்திருக்கிறார். அந்த வகையில் சமந்தாவின் மடியில் குரங்கு அமர்ந்து செல்ஃபி எடுக்கும் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அதில் கொள்ளை சிரிப்புடன் சமந்தா இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் இப்போது சமந்தா கம்பேக் கொடுத்துள்ளதாக கூறி வருகிறார்கள். மேலும் சமந்தா சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்க தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார். அதற்கான வேலையில் தற்போது தீவிரமாக இறங்கி இருக்கிறாராம் சமந்தா.
அதோடு மட்டுமல்லாமல் சமந்தா இல்லாத இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு முன்னணி இடத்திற்கு வந்துவிட்டார்கள். அவர்களை பின்னுக்கு தள்ள வேண்டும் என்றால் கடின உழைப்பு தேவை என்பதால் உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு தனக்கான மன வலிமை மற்றும் உடல் வலிமையை அதிகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.