ஜிம் ஒர்க் அவுட் செய்து யூத்தாக மாறிய தி லெஜண்ட் அண்ணாச்சியின் புகைப்படம்.. அடுத்த படத்தின் அவதாரம்!

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படம்  வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்து ஹீரோவாக அறிமுகமான அண்ணாச்சி படத்தில் ரோபோ போலவே இருக்கிறார் என்று கமெண்ட் செய்தனர்.

இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அண்ணாச்சி அடுத்த படத்திற்காக தீவிரமாக தன்னையே தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட் செய்து அவருடைய தோற்றத்தை சின்ன வயசு பையனாக மாற்றியிருக்கிறார்.

இவரின் தற்போதைய புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது, அந்த அளவிற்கு ஸ்லிம்மாக யூத் போல் மாறி இருக்கிறார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் நிச்சயம் அவருக்கு 50 வயசு தான் என நம்புவது கொஞ்சம் கஷ்டம்.

ஏற்கனவே லெஜண்ட் திரைப்படத்தில் சரவணன் அண்ணாச்சிக்கு கிடைத்த விமர்சனங்களை மனதில் வைத்துக் கொண்டு தனது அடுத்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த உள்ளதாக லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

ஜிம் ஒர்க் அவுட் செய்து யூத்தாக மாறிய சரவணன் அண்ணாச்சி

saravanan-annachi-cinemapettai
saravanan-annachi-cinemapettai

சரவணன் 50 வயதை தாண்டிய நிலையில், இளைஞர்களை போல் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படத்தையும் இவரே தயாரிக்கப் போவதாகவும், புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் அனைவரையும் அசரடிக்கும் அளவுக்கு ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்காமல் விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் அண்ணாச்சி அடுத்த திரைப்படத்தில் பயங்கர யூத்தாக தோன்ற இருக்கிறாராம். அதற்காக கச்சிதமாக ரெடியாகி உள்ளார்.