Nayanthara, Vignesh Shivan: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆன நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இவர்களுக்கு பிறந்தது. அடுத்த மாதம் இவர்கள் முதல் பிறந்த நாளை கொண்டாட இருக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பண்டிகை நாட்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஓணம் பண்டிகையை தனது மகன்களோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொண்டாடி இருக்கின்றனர்.
அதாவது இவர்கள் தங்களது மகன்களுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்றும் பெயர் வைத்திருந்தனர். எப்போதுமே தனது மகன்களின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிடும் போது உயிர், உலகம் என்று தான் பதிவிட்டிருப்பார். இப்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் ரத்தமாரே என்ற பாடல் வரியை விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார்.
இப்போது தனது மகன்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ரத்தமாரே என்ற பாடலையும் ஒலிக்கச் செய்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் உயிர் மற்றும் உலகம் இருவருமே மலமலவென வளர்ந்து இருக்கிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் தற்போது தன்னுடைய பட வேளையில் பிஸியாக இறங்க இருக்கிறார். நயன்தாராவுக்கும் தமிழ் சினிமாவில் இப்போது படங்கள் எதுவும் பெரிய அளவில் போகாத நிலையில் பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். அதுவும் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இதன் மூலம் நயன்தாரா விட்ட மார்க்கெட்டை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சினிமாவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பிசியாக இருந்தாலும் தனது குழந்தைகளுக்கான நேரத்தையும் அவ்வப்போது செலவிட்டார்கள்.