Maamanan: மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் மாமன்னன். இப்போது அரசியலில் அமைச்சராக இருக்கும் உதயநிதியின் கடைசி படம் மாமன்னன் என்பதால் அவரின் ரசிகர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் இப்படத்தை பார்க்க ஆர்வமாக இருந்தனர்.
மேலும் வடிவேலு மற்றும் பகத் பாஸில் போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதுமட்டுமின்றி தேவர்மகன் சர்ச்சையால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பல மடங்கு அதிகரித்து இருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி அரசியல் தலைவர் ஒருவர் சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்பதற்காக ஒரு படத்தில் நடித்துள்ளதால் உதயநிதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுக்கு சமீபத்தில் உதயநிதி கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
அப்போது அவர் அணிந்திருந்த சட்டை தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது மாமன்னன் படத்தில் உதயநிதி பன்றி வளர்ப்பது போலும், பகத் பாசில் நாய் வளர்ப்பது போலும் காண்பிக்கப்பட்டிருக்கும். மேலும் ஆதிவீரன் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருந்தார்.
தற்போதும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிவராமல் தனது சட்டையில் பன்றியை எம்ராய்டரி போட்டுள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு உதயநிதியின் சட்டையில் அவரது கட்சி கொடி மட்டுமே இடம்பெறும். ஆனால் இப்போது மாமன்னன் படத்திற்காக பன்றியை பயன்படுத்தி இருக்கிறார்.
இதைப் பார்த்த தொண்டர்கள் வருங்காலத்தில் கலைஞர் ஐயா போல் உதயநிதி திகழ்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பெரியாருக்கே சென்று விட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் உதயநிதியில் இந்த வித்யாசமான முயற்சி ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.