குக் வித் கோமாளிலிருந்து துரத்தி விடப்பட்ட ஓட்டேரி.. படமே ஓடலனாலும் அடைக்கலம் கொடுத்த ஹீரோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவு இருந்து வருகிறது. இந்த சூழலில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை புது கோமாளியாக ஓட்டேரி சிவா பங்கு பெற்றார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஓட்டேரி சிவா மது அருந்தி மட்டையானதால் அந்நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டைகர் தங்கதுரை கோமாளியாக பங்கு பெற்று வருகிறார்.

ஒரு பிரபல நிகழ்ச்சியில் இருந்து ஓட்டேரி சிவா தூக்கப்பட்டதால் இது இணையத்தில் வைரலாக பரவியது. அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் இவரைப் பற்றி நிறைய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஓவர் நைட்டில் ஓட்டேரி சிவா ஃபேமஸ் ஆகிவிட்டார்.

இப்போது ஓட்டேரி சிவா நடிகர் விஷாலின் கண்ணில் உள்ளார். அவருக்கு ஆறுதல் கூறி விஷால் அடைக்கலம் கொடுத்துள்ளார். அதாவது வீடு இல்லாமல் இருந்த அவருக்கு எங்கேயும் செல்ல வேண்டாம் எனது ஆபீஸ்லயே தங்கிக் கொள் என்று வேலை போட்டு கொடுத்துள்ளாராம்.

ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் விஷாலுக்கு தொடர்ந்து கேட்ட பெயர் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. மேலும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளாத காரணத்தினால் தயாரிப்பாளர்கள் செம காண்டில் உள்ளனர்.

இவ்வாறு விஷாலுக்கு ஏகப்பட்ட பிரச்சனை உள்ள நிலையில் இவர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். விஷாலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தண்ணி அடித்துக் கொண்டே இருப்பதால் ஒருவேளை அவருக்கு பார்ட்னராக ஓட்டேரியை சேர்த்துக் கொண்டாரோ என ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள்.