தனி ஒருவன் 2 எப்போது ஆரம்பிக்கும்.? மேடையில் தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

Thani Oruvan 2: ரவி மோகனுக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்த படம் தான் தனி ஒருவன். அரவிந்த்சாமி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அப்படம் அவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

அப்படம் அவரின் இரண்டாவது இன்னிங்க்ஸ் என்று சொல்லலாம். மோகன் ராஜா இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் படத்தை தயாரித்திருந்தது.

இதன் இரண்டாவது பாகம் பற்றிய அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வந்தது. ஆனால் அதன் பிறகு எந்த தகவலும் தெரியாமல் இருந்தது.

தனி ஒருவன் 2 எப்போது ஆரம்பிக்கும்.?

தற்போது தனி ஒருவன் 2 பற்றிய அறிவிப்பை மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா இருவரும் ஒரு மேடையில் அறிவித்துள்ளனர். இதில் ரவி மோகன், நயன்தாரா நடிப்பது உறுதி ஆகிவிட்டது.

இவர்களைத் தவிர பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். அதிலும் முதல் பாகத்தில் அரவிந்த்சாமி இறந்து விடுவார். அவருக்கு பதில் பவர்ஃபுல்லான வில்லன் ஒருவர் இதில் இணைய இருக்கிறார்.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கும். அதனால் அதை தொடங்குவதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது. விரைவில் ஒரு சரியான நேரத்தில் இந்த அறிவிப்பு வரும்.

மேலும் நிறைய பிரபலங்கள் நடிப்பதால் அவர்களின் தேதியும் கிடைக்க வேண்டும். அது மட்டும் இன்றி இது பயங்கரமான ஸ்கிரிப்ட்.

இதை அறிவிப்பதற்கு நாங்களே ரொம்பவும் ஆவலுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் தனி ஒருவன் 2 வராது என்ற வதந்திக்கு ஒரு விடை கிடைத்துவிட்டது.