சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டமும், நல்ல காலமும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் சில நடிகர்கள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் அவர்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுவார்கள். மீண்டும் அந்த நடிகர்கள் எந்த படத்தில் நடிப்பார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு இருக்கும்.
ஆனால் திறமையான நடிகர்களும் வாய்ப்பு கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். அப்படிதான் பிரபல நடிகர் ஒருவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பட்டையக் கிளப்பும் திறமை கொண்டவர். ஆனால் சமீபத்தில் அவருக்கு எந்த கதாபாத்திரமும் கைகொடுக்க வில்லை.
அதனால் இப்பொழுது வாய்ப்பினை தேடி அலைந்து திரிகிறார். கடைசியாக அவர் நடித்த படம் செம பெயர் வாங்கிக் கொடுத்தது. அதன்பின் நல்ல கதாபாத்திரங்கள் வரும் என்று நினைத்தவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் சரியான வாய்ப்பு அமையவில்லை.
2021 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பேட்டா பரம்பரை படத்தில் நடித்து அசத்திய ஜான் விஜய். இப்பொழுது படங்கள் சரிவர அமையாமல் இருக்கிறார். ஜான் விஜய் அந்தப் படத்தில் டாடி கதாபாத்திரத்தில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகராக மாறியவர் ஜான் விஜய்.
இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் முரட்டு வில்லனாகவும், முழு நேர காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் விருது வாங்க கூடிய திறமை எல்லாம் இருந்தும் கூட இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் சார்பட்டா பரம்பரை படத்தில் பலரையும் ‘லவ் யூ டாடி’ என சொல்ல வைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த ஜான் விஜய், தன்னுடைய முழு திறமையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கி தவிக்கிறார்.
இவரை விரும்பும் ரசிகர்களும் இவரின் அடுத்த படம் எப்போது என்றும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆகையால் ஜான் விஜய்-க்கு இயக்குனர்களும் பிரபல தயாரிப்பாளர்களும் முன்வந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.