ரமணா 2 மூலம் மறுபடியும் வரும் கேப்டன்.. படை தலைவன் விழாவை அதிர வைத்த ஏ ஆர் முருகதாஸ்

Ramana 2: கேப்டன் நடித்த படங்களில் ரசிகர்களுக்கு பிடித்தது என்று கேட்டால் அந்த லிஸ்டில் ரமணா நிச்சயம் இடம்பெறும். ஏ ஆர் முருகதாஸ், விஜயகாந்த் கூட்டணியில் வெளியான அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்போது கேப்டன் நம்முடன் இல்லை என்றாலும் அந்த படம் அவரை நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் படை தலைவன் விழா மேடையில் ஏ ஆர் முருகதாஸ் கொடுத்த அப்டேட் வைரலாகி வருகிறது.

ரமணா 2 மூலம் மறுபடியும் வரும் கேப்டன்

கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது. வரும் மே 23 வெளியாக இருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு கம்பீரமான ஒரு கதாநாயகன் கிடைத்து விட்டார்.

சீக்கிரம் வளர்த்து வாங்க ரமணா 2 பண்ணுவோம். அதன் மூலம் கேப்டனை திரும்ப காட்டுவோம் என கூறினார்.

உடனே மேடையில் இருந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனார். அங்கு இருந்தவர்களும் கூட கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

ஆக மொத்தம் ரமணா 2 வரப்போவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே சண்முக பாண்டியன் சினிமாவில் வளர வேண்டும். அதற்கு நான் உதவியாக இருப்பேன் என ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார்.

அதற்கேற்றார் போல் இப்படத்திலும் அவர் கேமியோ கதாபாத்திரம் செய்துள்ளார். அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் இப்படி ஒரு அப்டேட் கொடுத்திருப்பது கேப்டன் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.