அக்கட தேசத்திலும் கொடுத்த தொடர் பிளாப் படங்கள்.. தமிழிலே டேரா போட்ட உதயநிதி பட நடிகை

நடிகைகளை பொறுத்தவரை ஒரு இடத்தில் மார்க்கெட் இல்லை என்றால் வேற்று மொழி படங்களில் நடிப்பதை வாடிக்கையாக கொண்டு வருவர். அப்படி வேறு மொழி படங்களில் நடிக்கும் நடிகைகள் வெற்றிபெற்றால் அங்கேயா செட்டிலாகி விடுவார்கள்.இல்லையென்றால் மீண்டும் அதே இடத்திற்கு வந்து விடுவார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் அக்கட தேச படங்களில் நடித்திருந்த நிலையில், திடீரென அங்கு வாய்ப்புகள் பறிப்போனதால், தற்போது தமிழில் மீண்டும் வந்து நடிக்க துடியாய் துடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு உதவும் வகையில் தமிழக அமைச்சரும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனருமான உதயநிதி ஸ்டாலின் அந்த நடிகைக்கு மறைமுகமாக உதவி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் பல படங்களை வாங்கி திரையரங்கிற்கு விநியோகம் செய்து வரும் வேளையில், தமிழக அரசியலிலும் அதிகமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்திற்கு பின் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படம் தான் இவர் கடைசியாக நடிக்க உள்ள திரைப்படம் என்றும் அவரே அறிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் உருவாக்கி வரும் மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில், கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தை தொடர்ந்து இங்கேயே பட வாய்ப்புகளை தேடியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென உடலை ஒல்லியாக்கி தெலுங்கில் சென்று பல படங்களில் நடித்தார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான தசரா படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிக்கும் படி அமையவில்லை என்பதே உண்மை. இதன் காரணமாக தற்போது கீர்த்தி சுரேஷிற்கு தொடர் தெலுங்கு படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக தமிழில் சாணி காயிதம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அதன் பின் தெலுங்கு பக்கம் போய் நடித்து தற்போது மூக்கறுப்பட்டுள்ளார். இதனிடையே தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்,அடுத்த படியாக தொடர் 4 தமிழ் படங்களில் கமிட்டாகியுள்ளார். கீர்த்தி சுரேஷின் ரீ என்ட்ரியை மீண்டும் தமிழில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.