பல ஹீரோக்களை மிகப்பெரிய திறமைசாலியாக மாற்றிய ஒரே வில்லன்.. பாட்ஷா படத்துல ரஜினிக்கு இருந்த நடுக்கம்

தற்போதைய காலகட்டத்தில் டாப் ஹீரோக்கள் எல்லாம் வில்லனாக நடிப்பது ட்ரண்ட் ஆகிவிட்டது. ஆனால் அந்த காலத்தில் வில்லனாக நடித்தவர்களால் தான் டாப் ஹீரோக்களும் வளர்ந்திருக்கின்றனர். முதலில் வில்லனாக நடித்து அதன் பிறகு தற்போது சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து நிற்கும் ரஜினியின் வாழ்க்கையில் பாட்ஷா திரைப்படம், சூப்பர் ஹிட் ஆகி அவருடைய ரேஞ்சை எங்கேயோ கொண்டு சென்றது.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா என்ற சூப்பர் ஹிட் படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக மார்க் ஆண்டனி என்ற கேரக்டரில் ரகுவரன் மிரள விட்டிருப்பார். இதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிக்கு ஒரு விதமான நடுக்கமே ஏற்பட்டிருக்கிறது. இந்த சுவாரசியமான தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. பாட்ஷா படப்பிடிப்பின் போது ரஜினி கண்ணில் ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது.

அந்தப் படத்தில் கேட் வே ஆஃப் இந்தியாவில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில் ரஜினி மற்றும் பாட்ஷா படத்தில் வில்லன் ரகுவரன் இருவருக்கும் இடையேயான காட்சி மொத்த படத்தையும் தாங்கக் கூடிய அளவிற்கு வலுவானதாக இருக்கும். அந்த சீனில் கம்பீரமாக இருக்கும் ரகுவரனின் தோற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ரஜினி என்ன செய்வது என்ற பதட்டத்துடன் இருந்தார்.

அத்துடன் இவரை எப்படி தன்னுடைய நடிப்பால் சமாளிப்பது, என்ன பண்ண வேண்டும் என்ற ஒரு உந்துதலையே அவருக்குள் இன்னொரு எனர்ஜியை உருவாக்கும். அதனால் தான் எப்போதுமே படத்தில் வில்லனை ஸ்ட்ராங்காக போட வேண்டும். ஒரு கதை வலுவாக இருக்க வேண்டும் என்றால் வில்லனை ஸ்ட்ராங்காக்கணும். அப்படி வில்லனாக நடிப்பவனுக்கு தீனி போட்டால் தானாகவே எதிரில் இருக்கும் ஹீரோ அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறப்பாக நடித்தே ஆக வேண்டும்.

இதேப் போன்று பல படங்களில் ஹீரோக்களை மிகப்பெரிய திறமைசாலியாக மாற்றியதில் பெரும் பங்கு ரகுவரனுக்கு உண்டு. பாட்ஷா படத்தில் ரஜினியை நடுநடுங்க வைத்த ரகுவரன், முதல்வன் படத்திலும் அர்ஜுனை மிஞ்சும் அளவுக்கு நடித்து அசத்தியிருப்பார். இப்படி இவர் வில்லனாக நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய மிரட்டலான நடிப்பால் ஆட்டோமேட்டிக்காகவே ஹீரோக்களை நடிக்க வைத்து மிகப்பெரிய திறமைசாலியாக மாற்றி இருக்கிறார்.