AK 61 படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா.. கல்லா கட்ட காத்திருக்கும் போனிகபூர்!

தளபதி அஜித்தின் வலிமை படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த படமான AK 61 படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு முறை நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை கண்டு, தற்போது மூன்றாவது முறையாக கூட்டு சேர்ந்து வெற்றியை ருசிக்க காத்திருக்கிறது.

இயக்குனர் வினோத் தமிழ் சினிமாவிற்கு இதுவரை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து கொண்டிருப்பதால் AK 61 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

இன்னிலையில் AK 61 படத்தில் வினோத் வைத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களால் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது AK 61 படம் முழுக்க முழுக்க திருட்டை அடிப்படையாகக்கொண்ட ஆக்சன் திரில்லர் படமாகவே உருவாகி இருக்கிறது. இதில் பாடல் என்பதே கிடையாது. இந்தப்படம் இரண்டரை மணிக்கு குறைவான படம்.

இதில் பல்வேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ரசிகர்களுக்கு சுவாரசியம் பறிக்கும் வகையில் வினோத் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். அஜித்துடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே வலிமை படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்ததால், AK 61 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்ற வினோத் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் பத்து நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது.

கூடிய விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு AK61 படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆக்ஷன் திரில்லர் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பாடல் இல்லை என்கின்ற ஒரு குறை மட்டும் தான்.