இப்போது பெண் இயக்குனர்கள் அதிகம் சாதனை படைத்த வருகிறார்கள். அந்த வகையில் விக்ரம் வேதா புஷ்கர் காயத்ரி மற்றும் சூரரைப் போற்று சுதா கொங்கரா போன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் கிடைத்த பொக்கிஷங்களாக உள்ளனர். ஆண்களுக்கு சமமாக பெண்கள் எல்லா துறையிலுமே இப்போது ஆட்சி செய்கிறார்கள்.
ஆனால் தமிழ் சினிமா அறிமுகமான காலத்தில் படத்தில் ஹீரோயின் என்ற ஒரு கேரக்டரே கிடையாது. முழுக்க முழுக்க ஒரு ஆண்மகனை மையமாக வைத்து தான் படங்களை எடுத்து வந்தார்கள். படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சில இருந்தாலும் வெறுமனே பயன்படுத்து இருப்பார்கள்.
அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் முதல் முதலாக ஹீரோயினாக ஒரு நடிகை அறிமுகமானார். அதன் பின்பு அவரே இயக்குனராகவும் சாதித்து காட்டி உள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் முதல் முதலாக பேசும் படமாக வெளியான படம் காளிதாஸ்.
எஸ் எம் ரெட்டி இயக்கத்தில் வெங்கடேசன் நடிப்பில் வெளியான இப்படத்தில் முதல் முதலாக கதாநாயகியாக டிபி ராஜலக்ஷ்மி என்பவர் நடித்திருந்தார். இவர் மொத்தமாக 14 படங்களில் நடித்திருந்தார். அதன் பின்பு முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையும் இவரை தான் வந்து சேரும்.
டிபி ராஜலட்சுமி சீறி ராஜம் டாக்கீஸ் என்ற கம்பெனியை தொடங்கி அதில் முதலாவதாக மிஸ் கமலா என்ற படத்திற்கு கதை, வசனம், எழுதி இவரே கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் இவர்தான்.
ஆகையால் முதல் பெண் இயக்குனர் மற்றும் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமை டிபி ராஜலட்சுமி தான் சேரும். இப்போது சில ஆணாதிக்க வாதிகள் இருக்கும்போது பெண்கள் வளர முடியாத நிலையில் அந்த காலத்தில் ஒரு பெண்ணாக ராஜலட்சுமி சாதித்து காட்டியது பெருமைக்குரிய விஷயம்.