மணிரத்னம், ஷங்கரை மிரள விட்ட இயக்குனர்.. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக தயாராகும் படம்

கோலிவுட் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் பல கோடி பட்ஜெட் செலவில் அசால்டாக படத்தை எடுப்பார். அதேபோல் அவர் எடுக்கும் படங்களும் வசூலை வாரி குவித்து விடும். அதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டை நடத்தியது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமும் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டு இயக்குனர்களுக்கும் பயத்தை காட்டும் வகையில் சத்தம் இல்லாமல் ஒரு இளம் இயக்குனர் வளர்ந்து வருகிறார்.

அவர் வேறு யாரும் அல்ல விக்ரம் திரைப்படத்தின் மூலம் மிரள விட்ட லோகேஷ் கனகராஜ் தான். இதற்கு முன்பு அவர் கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் விக்ரம் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதனாலேயே அவர் தற்போது இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு வரலாறு காணாத அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இப்படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. அதனாலேயே இப்போது ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காலண்டரில் தேதியை கிழித்து கொண்டு இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க லியோ திரைப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாகவும் வளர்ந்து வருகிறதாம். இன்னும் சொல்லப்போனால் இரு படங்களும் நேரடியாக மோதுவதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். அதாவது பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகவும் அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இப்படி பரவி வரும் செய்தி தான் மீடியாவை கிடுகிடுக்க வைத்துள்ளது. அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ், மணிரத்தினம் மற்றும் சங்கர் இருவருக்கும் முக்கிய போட்டி இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். அந்த வகையில் லியோ திரைப்படம் விக்ரம் திரைப்படத்தை காட்டிலும் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.