ஆதிக்ரவிச்சந்திரன் போடும் அதிரிபுதிரி கணக்கு.. ஃபேன் பாய், அஜித்துக்காக புது ரூட்டில் அமைக்கும் ரோடு

அஜித் 180 கோடி முதல் 200 கோடிகள் வரை சம்பளம் கேட்கிறார். இவ்வளவு ஜாஸ்தியான சம்பளத்தை கொடுப்பது சாதாரண தயாரிப்பாளர்களுக்கு குதிரை கொம்பு. அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பது 90% உறுதியாகிவிட்டது, அஜித்தின் தீவிர ஃபேன் பாய் ஆதிக்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், லைக்கா, சோனி, டான் பிக்சர்ஸ்க்கு , பின் படங்களை தயாரிப்பதில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தான் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. புஷ்பா 2, ஜாட் போன்ற பெரிய பட்ஜெட் படங்களை இவர்கள்தான் தயாரித்தார்கள். ஏற்கனவே அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தையும் தயாரித்ததும் மைத்திரி தான்.

அஜித்குமார் கேட்கும் பெரிய சம்பளத்தை கொடுக்கக்கூடிய நிறுவனங்களாக கார்ப்பரேட் கம்பெனிகள் தான் இருக்கிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் இருந்தாலும் கூட இப்பொழுது அஜித்தின் அடுத்த படத்திற்கு அவர்கள் பின்வாங்கி விட்டார்கள். இவர்களைப் போலவே வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்ததும் கைவிடப்பட்டது.

இப்பொழுது ஆதிக்-அஜித் கூட்டணிக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் ஆதிக் புது ரூட் ஒன்றை கண்டுபிடித்து அதில் ரோடு போட ஆயத்தமாகி வருகிறார். பிரபுவின் மருமகன் தான் ஆதிக் ரவிச்சந்திரன். அவரது மகள் ஐஸ்வர்யாவைத்தான் கல்யாணம் செய்து இருக்கிறார்.

ஏற்கனவே பிரபுவின் சிவாஜி ப்ரொடெக்ஷன்ஸ் மீண்டும் படங்கள் தயாரிக்க வருகிறார்கள். வரிசையாக 5 படங்கள் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்கள். இதனால் தன்னுடைய மாமனாரின், தயாரிப்பு நிறுவனத்தில் கூட அஜித் படத்தை தயாரிப்பதற்கு அனுமதி வாங்க முற்படலாம். எப்படி பார்த்தாலும் இந்த கணக்கு லாபகரமாகத்தான் முடியும்.