பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், தங்கால் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்திருந்த நடிகை பாத்திமா சனா ஷேக்கை, ஆமிர் கான் மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆமிர்கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் தனது லகான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 16 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தான் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு தங்கால் படத்தில் ஆமிர்கானின் மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக்கே காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளன. 56 வயதாகும் நடிகர் ஆமிர்கான், மூன்றாவதாக 29 வயதுள்ள பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்யவிருப்பதே இப்போது பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.