புருஷன் போனா கூட பரவாயில்லை.. ஆனா? ஆர்த்திக்கு இருக்கும் வேற கவலை

Ravi Mohan : ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து பற்றிய செய்தி தான் இப்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே மாறி மாறி அறிக்கை விட்டு வரும் நிலையில் பல சினிமா விமர்சகர்களும் ஏதாவது சொல்லி சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.

இந்த சூழலில் ரவி மோகன் தனது சொத்துக்களை அபகரித்ததால் வெறும் காலுடன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்ததாக கூறியிருந்தார். இதை அடுத்து ஆர்த்தி ரவி தங்களது பிரிவுக்கு மூன்றாவது நபரே காரணம் என்று அறிக்கை விட்டிருந்தார்.

அதில் விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள் மற்றும் ரேஞ்ச் ரோவர் காருடன் தான் ரவி வீட்டை விட்டு சென்றார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆர்த்தியை கலாய்த்து வருகிறார்கள். அதாவது புருஷன் போன கவலை இல்லை, ரேஞ்ச் ரோவர் கார் போச்சுன்னு தான் கவலையா என்று நக்கல் அடித்திருக்கின்றனர்.

ரவியிடம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி

அதோடு இன்று இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஆர்த்தி தனது இரு குழந்தைகள் மற்றும் தனக்கு ஜீவனாம்சமாக மாதம் தோறும் 40 லட்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதை அடுத்து வழக்கு விசாரணை ஜூன் 12 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த போது ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சம் வேண்டாம் என்று கூறிவிட்டார். மேலும் நாக சைதன்யாவை விட சமந்தாவின் சொத்து மதிப்பு அதிகமாக இருந்தது. அதோடு குடும்ப பிரச்சனையால் இவர்கள் பிரிந்ததாக கூறப்பட்டது.

ஆனால் ஆர்த்தி வழக்கில் ரவி வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆகையால் விவாகரத்திற்கு நேரடியாக ஆர்த்தி மறுப்பு தெரிவிக்காமல் ஜீவனாம்சமாக அதிக தொகையை கேட்டு வருகிறார்.

இதற்கு ரவி தரப்பில் இருந்து என்ன பதில் வருகிறது என்பது அடுத்த வழக்கு விசாரணையின் போது தெரியவரும். ஏற்கனவே ரவி மோகன், தன்னை பொன் முட்டையிடும் வாத்தாக தான் ஆர்த்தி குடும்பம் பார்த்ததாக சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற பலரும் கூறி வருகின்றனர்.