இந்த தடியனுக்கு நடிப்பு சுட்டுப் போட்டாலும் வராது.. தவறாக கணித்த சிவாஜி, அடுத்தடுத்து 3 சூப்பர் ஹிட் படங்கள்

Actor Sivaji: சிவாஜி நடிப்பின் நாயகன், நடிப்பின் பல்கலைக்கழகம், எதார்த்தமான நடிப்பு, கம்பீரமான குரல் போன்று இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.  உண்மையான நடிப்பு என்றால் இவருடைய படங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் அந்த அளவிற்கு அசாத்திய நடிப்பை காட்டக்கூடிய திறமையானவர்.

அந்த வகையில் இவருடன் சேர்ந்து எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் ஏங்கிய காலங்கள் இருந்திருக்கிறது. இன்னும் சொல்ல போனால் நடிக்க வேண்டும் என்று பலரின் ஆசையை தூண்டி விடும் அளவிற்கு தத்துரூபமாக நடிக்க கூடியவர்.

அப்படிப்பட்ட இவருடைய மகன் பிரபுவை சினிமாவில் நடிக்க அனுப்புவதற்கு ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் இருந்திருக்கிறார். அதற்கு காரணம் தன் மகனுக்கு நடிப்பு சுட்டுப் போட்டாலும் வராது. மேலும் ஹீரோவாக நடிப்பதற்கு இவன் முகம் செட்டே ஆகாது என்று பிரபுவை நடிக்க விடாமல் தடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் எப்படியோ வீட்டில் உள்ளவர்களிடம் சம்மதம் வாங்கி பிரபு ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன் பின் கங்கை அமரன், சிவாஜி வீட்டிற்கு சென்று பிரபுவை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதற்கு சம்மதம் கேட்டிருக்கிறார். அதற்கு சிவாஜி தன் மகனைப் பார்த்து இந்த தடியனுக்கு நடிப்பு வராது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் பிரபுவுக்கு ஆர்வம் இருந்ததால் கங்கை அமரனின் கதையே கேட்டதும் சிவாஜி ஒத்துக் கொண்டார். அப்படி இவர் இயக்கத்தில் பிரபு நடித்த படம் தான் கோழி கூவுது. இப்படம் நினைத்துப் பார்க்காத அளவில் மிகப் பெரிய ஹிட் படமாக ஆனது. மேலும் இப்படத்தை பார்த்த பிறகு சிவாஜி தன் மகனை தவறாக நினைத்து விட்டேன்.

என்னுடைய இரத்தம் ஓடுது அதனால் நடிப்பு என்னை மாதிரி தான் இருக்கும் என்று புரிய வைத்து விட்டாய் என்று பிரபுவை பாராட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த படம் அதிசய பிறவிகள், சின்னஞ்சிறுசுகள். இப்படி இவர் நடித்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் ஆகி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக இவருடைய இமேஜ் உயர்ந்து விட்டது. அதன் பின்னரே மக்கள் திலகம் சிவாஜி கணேசன் மாதிரி இளைய திலகம் பிரபு என்று ரசிகர்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.