அல்லு அர்ஜுனுக்கு ஹாப்பி பர்த்டே.. கோடிகளில் சம்பளம் வாங்கும் புஷ்பா நாயகனின் மொத்த சொத்து மதிப்பு

Allu Arjun: தெலுங்கு நடிகராக இருந்தாலும் அல்லு அர்ஜுன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான். அக்கட தேசத்தில் ஹீரோவாக முன்னணி அந்தஸ்தை அடைந்த இவர் இப்போது பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார்.

இவருடைய புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. அதை அடுத்து கடந்த வருடம் வெளியான புஷ்பா 2 1800 கோடிகளை தட்டி தூக்கியது.

அப்படத்தால் அல்லு அர்ஜுன் சில சர்ச்சைகளுக்கு ஆளானாலும் தற்போது அவர் பெரிய ப்ராஜெக்ட்டில் கமிட் ஆகியுள்ளார். அதன்படி அட்லி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் இவர் நடிக்க இருக்கிறார்.

புஷ்பா நாயகனின் மொத்த சொத்து மதிப்பு

அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் முடிந்த நிலையில் இன்று அவர் பிறந்த நாள் ஸ்பெஷலாக அறிவிப்பு வெளிவர உள்ளது. இதை அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இன்று தன்னுடைய 43வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த வயதில் அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதன்படி தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இவர் இருக்கிறார். புஷ்பா 2 படத்திற்காக 300 கோடி சம்பளம் பெற்றதாக கூட தகவல்கள் கசிந்தது.

அப்படி என்றால் அவ்வளவு தொகையை சன் பிக்சர்ஸ் சம்பளமாக கொடுக்க சம்மதித்து விட்டார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

மேலும் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமாக ரக ரகமான கார்கள், ஆடம்பர பங்களாக்கள் என பல சொத்துக்கள் இருக்கிறது. இதன் மதிப்பே 300 கோடிகளைத் தாண்டும்.

இதை வைத்து பார்க்கும் போது கடந்த வருட நிலவரப்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு 450 கோடியாக இருக்கிறது. இந்த வருடம் பெரிய ப்ராஜெக்ட்டில் கமிட் ஆகி இருப்பதால் இன்னும் அவருடைய சொத்து மதிப்பு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

1 thought on “அல்லு அர்ஜுனுக்கு ஹாப்பி பர்த்டே.. கோடிகளில் சம்பளம் வாங்கும் புஷ்பா நாயகனின் மொத்த சொத்து மதிப்பு”

Leave a Comment