பிரபல தயாரிப்பாளரின் மகன் தன்னைவிட 12 வயது மூத்த நடிகையை காதலித்து வருவதே பேசுபொருள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவருடன் பொழுதை கழிக்க 20 கோடிக்கு வாங்கியது கிசுகிசுவை உண்டாக்கியுள்ளது.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை தயாரித்து வருபவர்தான் போனி கபூர். இவரது மூத்த மனைவிக்கு பிறந்தவர்தான் அர்ஜுன் கபூர். தற்போது பாலிவுட் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.
இவருக்கும் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை மலைக்கா அரோரா என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த விஷயம் பல நாட்களாக பாலிவுட் பத்திரிகைகளின் காதைக் கடித்துக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் காதலுக்கு வயது முக்கியமில்லை என காட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அந்த ஆண்ட்டி நடிகையின் மீது அவருக்கு அவ்வளவு காதலாம்.
இந்த நிலையில் அவருடன் நிரந்தரமாக குடியிருக்க தற்போது 20 கோடி செலவு செய்து மலைக்கா அரோரா இருக்கும் அதே ஏரியாவில் அவரது வீட்டிற்கு அருகிலேயே புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார் அர்ஜுன் கபூர்.
நடிகை மலைக்கா அரோராவுக்கு 47 வயதாகிறது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னணி நடிகர் சல்மான்கானின் சகோதரரை திருமணம் செய்து கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் விவாகரத்து பெற்றுக் கொண்டார். இவரை காதலிக்கும் அர்ஜுன் கபூருக்கு வெறும் 35 வயதுதான் ஆகிறது எனவும் இருவருக்கும் 12 வயது வித்தியாசம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
