ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ்.. முதல் படத்திலேயே இப்படியா?

Logesh kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை தெரியாத ஆடல் இருக்கமுடியாது சினிமா வட்டாரங்களில். இவர் தனக்கென ஒரு பெரிய அடையாளத்தாயே உருவாக்கி வைத்துள்ளார் என்றல் மிகையாகாது.

இவர் இயக்கம் எல்லாமே மிக நன்றாகவும், ஆக்ஷ்ன் நிறைந்ததாகவும் இருக்கும். மக்களிடையே குறைந்த நாட்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் என்றே கூறலாம். இவர் இயக்கிய படம்லாம் சூப்பராக இருக்கும்.

அப்போ இவர் நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்தவர்களுக்கெல்லாம் சக்கரை போடும் விதமாக அமைத்துள்ளது இந்த செய்தி. ஆமாம் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் லோகேஷ் கனகராஜ் அவர்களை ஹீரோவாக வைத்து படம் பண்ண போவதாக அப்டேட் கிடைத்துள்ளது. அந்த படத்தின் கதை ஒரு “gangster” கதையாம். இந்த படத்திற்காக தாடியெல்லாம் வளர்ப்பதாகவும், உடல் எடையை குறைப்பதாகவும் கூறியுள்ளார் லோகேஷ்.

மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளதாகவும், படப்பிடிப்புக்கு தயார் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இயக்குனராக வெற்றிகண்ட லோகேஷ், ஹீரோவாக வெற்றிவகை சூடுவரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

நிறைய இயக்குனர்கள் ஹீரோவாக களம் இறங்கி காணாமல் போன கதையெல்லாம் நாம் கேட்டுருக்கிறோம். அதுபோல இந்த ஹீரோ வேடம் லோகேஷ்க்கு செட் ஆகுமா? என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறதாம்.