Beast போஸ்டரில் மறைந்துள்ள விஜய் வயது.. அட இது தெரியாம போச்சே

இன்று ஜுன் 22 இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள். தனது 47-வது வயதை தொட்டாலும் அவருடைய ஆட்டம் பாட்டம் இன்னும் இளமையாகத் தான் இருக்கிறது.

நேற்று வெளிவந்த பீஸ்ட் பட போஸ்டர் வைரலாகி இன்னும் முடிந்தபாடில்லை. பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டு ஷாக் கொடுத்தார் விஜய்.

beast-second-look-cinemapettai
beast-second-look-cinemapettai

கொரோனா காலமாக இருப்பதால் விஜய் படம் போஸ்டர் வெளியீடு வெளியில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. எல்லாம் ஆன்லைன் கொண்டாட்டங்கள் மட்டும்தான்.

நேற்று வெளியான டீஸ்ட் பட போஸ்டரில் சில பல ரகசியங்களையும் வைத்து வெளியிட்டு இருக்கிறார்கள் தனது 47வது வயதை அதன் டைட்டிலிலேயே வைத்திருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவுகிறது.

A,B,C,D வரிசையில் Beast எழுத்துக்களுக்கான எண்களை சேர்த்தால் விஜய்யின் வயது 47 வருகிறதாம். அதாவது B(2) + E(5) + A(1) + S(19) + T(20) = 47 இப்படி ஒரு பார்முலாவை போட்டு விஜய்யின் வயது தெரிவித்துள்ளதாக நமது ரசிக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.