லொள்ளு சபா டீமை மிரட்டினாரா விஜய்.? விஜய் டிவி எடுத்த ஆக்ஷன்

Vijay: விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி ரொம்பவும் பிரபலமானது. அதன் மூலம் சந்தானம் உட்பட பல நடிகர்கள் பெரிய திரைக்கு வந்திருக்கின்றனர்.

அதேபோல் ஒவ்வொரு படத்தையும் அவர்கள் கலாய்த்து தள்ளுவார்கள். கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கூட ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் அது.

அந்த நிகழ்ச்சியில் விஜய் நடித்த போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் கலாய்த்திருப்பார்கள். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான இரண்டு நாட்களில் விஜய் தரப்பிலிருந்து லொள்ளு சபா டீமுக்கு அழைப்பு வந்திருக்கிறது.

அனைவரும் அங்கு சென்றபோது எஸ்ஏ சந்திரசேகர் எப்படி இந்த மாதிரி கலாய்க்கலாம் என கடுமையாக பேசியிருக்கிறார். அது மட்டும் இன்றி விஜய் டிவிக்கும் மிரட்டல் வந்திருக்கிறது.

விஜய் டிவி எடுத்த ஆக்ஷன்

இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யக்கூடாது நீக்க வேண்டும் என சந்திரசேகர் மிரட்டல் தொனியில் பேசி இருக்கிறார்.

சேனல் தரப்பிடமிருந்து எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லையாம். கடைசியில் விஜய்யை வைத்துக் கூட பேசி பார்த்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சேனல் பெயர் கூட உங்களுக்காக தான் வைத்திருக்கிறோம் என அவர்களை தாஜா செய்துள்ளனர். மேலும் விஜய்க்காக ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

அதன்பிறகு தான் அவர்களின் கோபம் குறைந்ததாம். இந்த விஷயத்தை லொள்ளு சபா சுவாமிநாதன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு கருத்து சுதந்திரம் கூட கிடையாதா. அதை விஜய் ஏன் தடுக்க வேண்டும் என அவர் மீது புது பஞ்சாயத்து எழுந்துள்ளது.

Leave a Comment