Actor Vijay put 4 conditions to his party executives: கடந்த 14 வருடமாக விஜய் அரசியலில் ஒவ்வொரு அடியாக கால் எடுத்து வைக்கிறார். அதிலும் கடந்த நான்கு வருடங்களாக அரசியலுக்கு வருவதில் தீவிரம் காட்டுகிறார். இதனால் பிப்ரவரி முதல் வாரத்தில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் தன்னுடைய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்யப் போகிறார்.
விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே உள்ளாட்சி மன்ற தேர்தலில் சுயேட்சியாக நின்று போட்டியிட்டனர். இப்போது விஜய்யே 2024 மற்றும் 2026 ஆண்டில் நடக்கப் போகும் தேர்தலில் களம் இறங்குவதால், தன்னுடைய கட்சியை பலப்படுத்தி வருகிறார். இவருடைய கட்சிக்கு ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என்ற பெயரை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது எல்லாம் அடிக்கடி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆனால் அதில் என்ன பேசுகிறார்கள் என்பது வெளியில் தெரியாமல் சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது. இதற்கு காரணம் விஜய் தன்னுடைய கட்சியின் நிர்வாகிகளிடம் ஸ்டிட்டா நான்கு கண்டிஷனை போட்டு இருக்கிறார். விஜய் கட்சி நிர்வாகிகளுடன் மீட்டிங்கில் பேசும் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது. இதுதான் விஜய் போட்ட முதல் கண்டிஷன்.
விஜய் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு போட்ட 4 கண்டிஷன்
அதோடு கட்சி நிர்வாகிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் மீட்டிங்கில் பேசிய விஷயத்தைப் பற்றி கலந்துரையாடக்கூடாது. இரண்டாவது கண்டிஷன் ஆக தொகுதியில் கட்சியை பற்றி என்ன பேசுகிறீர்கள் என்று உடனே தெரிவிக்க வேண்டும். மூன்றாவதாக மற்ற ரசிகர் மன்றங்கள் நமக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா என்பதை பற்றி தெரிவிக்க வேண்டும்.
நான்காவதாக தளபதி விஜய் தன்னுடைய 68வது படமான ‘தி கோட்’ படத்தின் ரிலீஸுக்கு பின்பு தான் அரசியலில் முழு நேரமும் கவனம் செலுத்துவாராம். அதுவரை எந்த குழப்பமும் நிகழாமல் கட்சி நிர்வாகிகள் தலைமை சொல்வதை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இந்த கண்டிஷன்சை எல்லாம் தமுக கட்சி நிர்வாகிகள் பிசிறு தட்டாமல் பின்பற்றி வருகின்றனர்.