Actor Vijay sethupathi starrer movie for Good night manikandan direction: தமிழில் நடிகனாக அறிமுகமானாலும் வில்லனாக மாறி புகழின் உச்சிக்கு சென்றவர் விஜய் சேதுபதி. ஆம் இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட விஜய், கமல், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்ததுதான் அதிகம் பேசப்பட்டது எனலாம்.
ஹீரோவாக நடிக்கும் போது பழைய படங்களின் சாயல் தெரிய, வில்லனாக நடிக்கும் போதோ தத்ரூபமாக நடிக்கிறார் என்று கொண்டாடப்படுகிறார் விஜய் சேதுபதி. சிறந்த நடிகராக குணச்சித்திர நடிகராக வில்லன் ஆக பெயர் வாங்கிய விஜய் சேதுபதி தற்போது வில்லனாக நடிக்க மாட்டேன் கேமியோ ரோலிலும் வரமாட்டேன் என்று பிடிவாதம் கொள்கிறார்.
அடுத்ததாக விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் இவருடன் நடித்த மணிகண்டனின் ஜெய் பீம் மற்றும் குட் நைட் படங்கள் நல்லா வரவேற்பை பெற்றதை அடுத்துதொடர்ந்து புது இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகி இரண்டு வருடங்களுக்கு பிசியாக உள்ளார் மணிகண்டன்.
இருந்தாலும் நடிகராக இருப்பதை விட இயக்குனராக இருப்பதையே விரும்பும் மணிகண்டன் ஏற்கனவே பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். மேலும் மாதவன், விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் நடித்த விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியவரும் மணிகண்டனே.
ஓடிடியில் வெளியிடப்பட்ட நரை எழுதும் சுயசரிதம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மணிகண்டன். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. இத்தோடு நின்று விடாமல் விஜய் சேதுபதியை அணுகி கதை சொல்லி உள்ளாராம் மணிகண்டன்
விக்ரம் வேதா படத்தின் போதே மணிகண்டனின் மல்டி டேலண்ட் திறமையை அறிந்து கொண்ட விஜய் சேதுபதி இவர் இயக்குனராக உச்சம் தொடுவார் என்ற நம்பிக்கையில், “நீ எல்லாம் ஜெயிக்கணும் டா!”என வாய்ப்பு கொடுத்து விட்டாராம் விஜய் சேதுபதி. விரைவில் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் தரமான திரைக்கதையுடன் உருவாகும் படத்தை எதிர்பார்க்கலாம்.