Vishal: 47 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற கொள்கை அவருக்கு இருக்கிறது.
நடிகர் சங்க கட்டிட பணிகளும் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனால் மீண்டும் விஷால் திருமணம் எப்போது என்று கேள்விகள் எழ தொடங்கிவிட்டது.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தான் ஒருவரை காதலிப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் திருமணம் என்றும் விஷால் கூறியிருந்தார்.
முரட்டு சிங்கிளுக்கு கல்யாணம்
அதை அடுத்து யார் அந்த கல்யாண பொண்ணு என்று தேடுதல் வேட்டையில் ரசிகர்கள் இறங்கினார்கள். அதன்படி சாய் தன்ஷிகாவை தான் இவர் காதலித்து வருகிறார்.
பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் சூப்பர் ஸ்டாரின் மகளாக கபாலி படத்திலும் நடித்திருந்தார். இவரைத் தான் விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகிடா பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. அதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் தங்களுடைய திருமணத்தையும் இந்த ஜோடி அறிவிக்க இருக்கிறார்களாம். இந்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் திருமண அறிவிப்பை எல்லோரும் எதிர்பார்த்து வருகின்றனர்.