விஷாலை மிஸ் செய்யும் மிஷ்கின்.. துரோகத்திற்கு பழியாக பக்காவாக போட்ட பிளான்

Actor vishal with director hari titled a new film rathnam:  விஷால், எஸ் ஜே சூர்யா நடித்து ஆதி ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்த படமான “விஷால் 34” காக ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து உள்ளார் விஷால். கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரத்னம் என  பெயரிட்டு  டீசர் வெளியிட்டு உள்ளனர்.

ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ள படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரத்னத்தை எதிர்பார்க்கலாம். தாமிரபரணி, பூஜை போன்று குடும்பப் பாங்கான மற்றும் ஆக்சன் திரில்லராக ரத்னம் இருக்கும் என தகவல்கள் வந்துள்ளது.

தூத்துக்குடியில் ரத்னம் படப்பிடிப்பின் போது அங்கு சில இடங்களில் மக்கள் குடிநீர் பிரச்சினை எதிர்கொண்ட போது உடனடியாக இரண்டு பெரிய குடிநீர் தொட்டிகளை அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தார். மக்கள் இவரை கருப்பு எம்ஜிஆரா அல்லது அடுத்த விஜயகாந்த்தா என யோசித்து வரும் அளவுக்கு சமூக சேவையில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் பிறமொழி நட்சத்திரங்களை கெஸ்ட் ரோலாக உட்புகுத்தி  படத்திற்கு மேலும் பலம் சேர்ப்பது ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த தந்திரத்தை கையில் எடுக்கும் விஷால்  ஹரியின் படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்திற்காக மும்பை சென்று முன்னணி நடிகர்கள் யாரை நடிக்க வைக்கலாம் என அலசி ஆராய்ந்து வருகிறார். கண்டிப்பாக ஒரு முக்கிய புள்ளியுடன் வருவார் என எதிர்பார்க்கலாம்.

என்னதான் மிஸ்கின் நான் விஷாலை மிஸ் செய்கிறேன் என்று சொன்னாலும்  மிஷ்கினின் துரோகத்தை மறக்காத விஷால் தான் இயக்கப் போகும் துப்பறிவாளன் 2 க்கு பக்காவாக பிளான் போட்டு ஹிட் அடிக்க வைக்க வேண்டும் என அதீத கவனத்துடன் உள்ளார்.