அஜித் பட ரீமேக்கில் திணறிய நடிகர்.. கஷ்டப்பட்டு நடித்த கதை

Ajith : கூலி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரமோஷன் தீவிரமாக நடந்த வருகிறது. இதில் நடித்த பிரபலங்கள் பலரும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அஜித் பட ரீமேக்கில் நடித்ததை பற்றி பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.

அஜித் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அவருக்கான ரசிகர் பட்டாளம் ஏக்கசக்கமாக இருக்கிறது. அவர் தன்னுடைய ரசிகர் கூட்டத்தை பல வருடங்களுக்கு முன்பே களைத்துவிட்டார். ஆனாலும் அவருக்காக தற்போதும் அவரது ரசிகர்கள் நின்று வருவதற்கான காரணம் அவருடைய படங்கள் மற்றும் குணம் தான் காரணம்.

அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு அஜித் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் தான் வரலாறு. இந்த படத்தின் டைட்டில் ஆரம்பத்தில் காட்ஃபாதர் என்று வைக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு வரலாறு என்று மாற்றப்பட்டது.

அஜித் நடித்த கதாபாத்திரத்தில் கஷ்டப்பட்டு நடித்த கூலி நடிகர்

இந்தப் படத்தில் அஜித் ஒரு கதாபாத்திரத்தில் பரதநாட்டிய கலைஞராக இருப்பார். அப்படியே பெண்ணின் பாவனையை பிரதிபலிக்கும்படி நடித்திருப்பார். இந்த படம் கன்னடத்தில் காட்ஃபாதர் என்று ரீமேக் செய்யப்பட்டது. இதில் அஜித்தின் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடித்திருந்தார்.

தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களின் மிகவும் கடினமாக இருந்தது காட்ஃபாதர் படத்தில் அந்த கதாபாத்திரம் தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் அதில் அஜித் திறம்பட நடித்திருந்தார். தன்னால் அதுபோன்ற நடிக்க சிரமப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

இப்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கூலி படத்தில் உபேந்திரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கண்டிப்பாக அவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.