இளம் நடிகர்களுக்கெல்லாம் முன் உதாரணம் இருந்து தன்னுடைய படங்களின் மூலம் நடிப்பை கற்றுக் கொடுக்கும் ஜாம்பவான் ஆக இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சுமார் 40 வருடங்களாக திரையில் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருந்தார்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் சிவாஜியின் படங்கள் ஓடாமல் டல் அடித்தது. அதன் பின் படங்களில் வெறும் கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் போது, சிவாஜியின் சகாப்தம் முடிந்து விட்டது, இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்று அவர் காலத்து நடிகர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.
இருப்பினும் சிவாஜியின் ரசிகர்களும் அவரை திரையில் காண பெரிதும் ஆசைப்பட்டு கொண்டிருந்தனர். 1984 இல் வெளியான இரு மேதைகள் மற்றும் தாவணிக் கனவுகள் போன்ற படங்களில் கௌரவ கதாபாத்திரத்தில் மட்டுமே தலையைக் காட்டினார் சிவாஜி.
இனிமேல் இவர் ஹீரோவாக எல்லாம் நடிக்க முடியாது. இவருடைய சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று அனைவரும் கருதினர். ஆனால் அந்த சமயத்தில் எல்லாருடைய வாயையும் அடைக்கும் அளவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். 1985 ஆம் ஆண்டு சுதந்திர தினமாகிய ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் முதல் மரியாதை.
இந்தப் படத்தில் சிவாஜி உடன் ராதா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் சிவாஜியின் கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கிட்டத்தட்ட இந்த படத்தில் நடிக்கும் போது சிவாஜி கணேசனுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும்.
அதன்பின் சிவாஜி கணேசன் கேரியர் டல்லடிக்கும் போது இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்து மற்ற நடிகர்களின் ஆட்டத்தை அடக்கினார்கள் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த படத்தை சிவாஜி ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதோடு சிவாஜியின் சகாப்தம் முடிந்தது என கொண்டாடியவர்களுக்கும் இந்த படம் சரியான பதிலடி கொடுத்தது.