கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடக்கப்போகும் அற்புத நாடகம்.. எம்ஜிஆர், சிவாஜியாக நடிக்கப் போகும் நடிகர்கள்

Kalaigar Nootrandu Vizha: ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் நூற்றாண்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த விழாவில் நிறைய நாடகங்கள் அரங்கேற இருக்கிறது.

அதில் முக்கியமான ஒரு நாடகத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் வேடமிட்டு முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டு ஜாம்பவான்கள் நடித்திருக்கின்றனர். அதாவது முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி வசனம், திரைகதை எழுதுவதில் பலே கில்லாடி என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அரசியலின் ஆளுமையாக கலைஞர் இருந்தாலும் சினிமாவிலும் தனது திறமையை வெளிக்காட்டும்படி பல படங்களில் அவருடைய வசனங்கள் இன்றும் ரசிகர்கள் வியக்கும்படி அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றளவும் பராசக்தி படத்தில் அவர் எழுதிய வசனம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த காலத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவருமே ஒரே நேரத்தில் தனக்கு வசனம் எழுத வேண்டும் என்று சொல்லி சண்டை போட்டுக் கொள்வார்களாம். அதை தான் இந்த விழாவில் நாடகமாக போட இருக்கிறார்கள். அதில் கலைஞராக காமெடி நடிகர் தம்பி ராமையா நடிக்கவிருக்கிறார்.

அதேபோல் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் சத்யராஜ், சிவாஜி கணேசனாக நாசரும் நடிக்க இருக்கிறார்கள். சத்யராஜ் மற்றும் நாசர் இருவருமே எப்படிப்பட்ட நடிகர்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். எல்லா மொழியிலும் இவர்கள் பரீட்சியமான நடிகர்கள் என்பதால் முதலில் இவர்களைத் தான் பான் இந்திய படங்களில் இயக்குனர்கள் தேர்வு செய்கிறார்கள்.

மேலும் கலைஞர் விழாவிலும் இவர்கள் போடும் நாடகம் தான் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் எந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.