Actress Aiswarya rajesh celebrates pongal Vizha in Sri lanka: பெரிய பட்ஜெட் படங்களாக இல்லாவிட்டாலும் ரெண்டு இலக்க கோடிகளில் டிமாண்ட் பண்ணாமல் தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் விருப்பத் தேர்வாக, தான் நடிக்கும் அத்தனை படங்களிலும் தனது தனி திறமையை நிரூபித்து வெற்றி பெற்று வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
எப்போதும் கைநிறைய பட வாய்ப்புகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்,மலையாளம், தெலுங்கு என பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ரன் பேபி ரன்,பர்கானா, சொப்பன சுந்தரி, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற திரைபடங்கள் மூலம் ரசிகர்களிடையே நீங்கா இடத்தை பிடித்து விட்டார் ஐஸ்வர்யா.
பெரிய பின்புலம் எதுவும் இல்லாமல் சாதாரண நடிகையாக தன் கேரியரை துவங்கியவர் கிடைக்கும் வாய்ப்புகளை விடாமல் பற்றி முன்னேறி இந்த நிலையை தக்க வைத்து உள்ளார். இலங்கை அரசு சமீபத்தில் பொங்கல் விழாவிற்காக ஐஸ்வர்யா ராஜேஷை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.
இதை ஏற்று பொங்கல் விழாவை சிறப்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய காசுக்கும் அதிகமாக சில பல எக்ஸ்ட்ரா பிட்டுகளை போட்டு அவருக்கான ஆப்பை நங்கூரமாக பாய்ச்சி வந்துள்ளார். இலங்கை அரசின் அமைச்சர் ஜீவன் அவர்கள் கூப்பிட்டதற்கு இணங்கி இலங்கை உள்ள நுவரேலியா மாவட்டத்தில் பொங்கல் விழாவை கொண்டாட சென்றவர் தன் பங்குக்கு சொற்பொழிவுகளை வாரி வழங்கி உள்ளார்.
அமைச்சர் பல நல்ல விஷயங்கள் செய்து வருகிறார் என கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கூறியவர், “எனக்கு திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை” என்ற தன் விருப்பத்தை கூறியுள்ளார். இந்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? இரண்டையும் ஒன்றாக இணைத்து கலாய்த்து வருகின்றனர்.
மேலும் அமைச்சர் ஜீவனை பார்த்து, அமைச்சர் என்றதும் வயதானவர் என்று எண்ணிவிட்டேன் இவ்வளவு அழகான குறைந்த வயதுடன் இருக்கும் அமைச்சரை நான் எதிர்பார்க்கவில்லை என்று வழிய தொடங்கிவிட்டார். என் நம்ம உதயநிதிக்கு என்ன குறைச்சல்? அவரும் இங்க தானே இருக்கிறாரு? ஸ்போர்ட்ஸ் மேன் கூட இப்படி பக்காவா ஃபிட் ஆக இருக்க மாட்டான். நம்ம ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் ஜம்முனு இருக்கிறாரு! நீங்க பார்த்தது இல்லியா?
போனோமா, பொங்கல் கொண்டாடினோமா, வாங்கின காசுக்கு ரெண்டு வார்த்தை பேசினோமா என்று இல்லாமல், ஏன் இந்த கொஞ்சல்ஸ் ?என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தேவையில்லாமல் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டு வந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.